Home புதினங்களின் சங்கமம் யாழில் பல்கலைக்கழக மாணவியுடன் சந்தோசமாக இருந்த காட்சிகளை காதலனுக்கு அனுப்பிய அத்தான்! சொத்து ஆசை?

யாழில் பல்கலைக்கழக மாணவியுடன் சந்தோசமாக இருந்த காட்சிகளை காதலனுக்கு அனுப்பிய அத்தான்! சொத்து ஆசை?

யாழ் மானிப்பாய் பகுதியில் தனது கணவர் தனது தங்கையுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளதை அறிந்தும் மனைவி அது தொடர்பாக அலட்டிக் கொள்ளாமல் உள்ளதுடன் அதனை சுட்டிக்காட்டியவர்களை கண்டபடி ஏசிவருவதாகவும் தெரியவருகின்றத. பல்கலைக்கழக மாணவி தனக்கு அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த காதலன் இருந்த போதும் தனது அக்காவின் கணவரான பிரபல வர்த்தகர் என்ற போர்வையில் இயங்கும் அத்தானுடன் அந்தரங்கத் தொடர்பில் இருந்து வந்துள்ளதாக குறித்த மாணவியின் காதலனான மருத்துவபீட மாணவன் வம்பனுக்கு தெரிவித்துள்ளார். தனது காதலி தொடர்பாக இனந்தெரியாத வட்சப் இலக்கம் மூலம் தனது வட்சப்பிற்கு வந்த வீடீயோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பார்த்த அதிர்ந்த மாணவன் அது தொடர்பாக தான் காதலியுடன் முரண்பட்டதாகவும் அதன் பின்னர் காதலியின் அக்கா தன்னுடன் தொலைபேசியல் தொடர்பு கொண்டு ”தனது கணவருடன் தனது தங்கைக்கு தொடர்பிருந்தால் அவளை விட்டு நீ விலகி விடு. அவர் அவளுடன் படுத்தெழுந்தாலும் தனக்கு பிரச்சனை இல்லை” என கூறியதாகவும் அது தொடர்பான ஒலிப்பதிவுகளையும் காதலன் எமக்கு அனுப்பியுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பான ஆதாரங்களையும் தான் அவளைக் காதலித்ததற்கான ஆதாரங்கள் போன்றவற்றையும் எமக்கு அனுப்பியுள்ளார். அத்துடன் தனது காதலியின் கோடிக்கணக்கான பெறுமதியான வீடு, காணிகள், சொத்துக்களை தன்வசப்படுத்தவே அத்தான் அவளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதே நேரம் இது தொடர்பாக காதலியின் அக்காவுடன் வம்பன் தொடர்பு கொண்டு கேட்ட போது ” தனது தங்கைக்கும் தனது கணவருக்கும் இடையில் 18 வயது வித்தியாசம் எனவும் தனது தங்கைக 10 வயது சிறுமியாக இருக்கும் போது தனக்கு கலியாணம் நடந்ததாகவும், திருமணமாகி ஒரு வருடத்தில் தனது தாய் இறந்த பின்னர் அன்றிலிருந்து தனது கணவர் தனது தங்கையை தனது மகள் போல பார்த்து வருவதாகவும் கூறினார். அதே வேளை மிகப் பெறுமதியான இடத்தில் உள்ள வர்த்தக நிலையம், மற்றும் கோடிக்காணக்கான பெறுமதியான காணிகள் போன்றவற்றை தாயும், தந்தையும் சகோதரிகளான எமக்கு பகிர்ந்தளிக்க முன்னரே இறந்துவிட்டதாகவும். தான் வசிக்கும் வீடு மாத்திரம் கணவருக்கு சீதனமாக தாய் கொடுத்துள்ளார் எனவும் வெளிநாட்டில் வாழ்ந்து வந்த தனது அண்ணன் விபத்தில் இறந்து விட்டதால் அவருக்கு என தனது வர்த்தகநிலையத்ததை கொடுக்க முடிவு செய்யப்பட்ட காணிகளும் தற்போது இருப்பதாகவும் இவற்றை எல்லாம் தனது தங்கையை காதலித்தவன் திருமணத்தின் போது தனக்கு எழுதித் தர வேண்டும் என கேட்டு முரண்பட்டதாகவும் கூறினார். இந் நிலையிலேயே தனது தங்கை அவனை புறந்தள்ளி வாழ முடிவு செய்ததாகவும் அக்கா எமக்கு கூறியுள்ளார்.

ஆனால் மாணவன் கூறிய சில தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலனுக்கு அனுப்பபட்ட வீடியோக்கள் காதலியான மாணவிக்கு 15, 16 வயதாக இருக்கும் போது 2017, 18 ம் ஆண்டு காலப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. எடுத்தது யார் என அறியாதவாறு அவளை மட்டும் குறி வைத்து அவளுககு பாலியல் சில்மிசங்கள் செய்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ காதலனுக்கு அனுப்புவற்கு சில நாட்களுக்கு முன் குறித்த மாணவி தனது அக்காவும் அத்தானும் தன்னிடம் சொத்துக்கள் தொடர்பாக உறுதியில் கையெழுத்து இடுமாறு கேட்டு தொல்லைப்படுத்துகின்றார்கள் என கூறியுள்ளாள். இதனை அடுத்து காதலன் அவ்வாறு செய்ய வேண்டாம் என ஆலோசனை கூறியுள்ளார். திருமணமாகாது இறந்த அண்ணனுக்கு என பெற்றோரால் கூறப்பட்டு வந்த 15 கோடி ரூபாவுககும் அதிகமான பெறுமதியுடைய வர்த்தக நிலையக்காணி, மேலும் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் போன்றவற்றை தாங்கள் பெற்றுக் கொள்வதற்காக தங்கை திருமணம் செய்வற்கு முன்னரே கையெழுத்து வைக்க அக்காவும் அத்தானும் முயன்றுள்ளார்கள். அதனை காதலனான மாணவன் தடுத்து நிறுத்திய கோபத்திலேயே காதலனுக்கு குறித்த வீடியோக்கள் திட்டமிட்டு அனுப்ப்பட்டுள்ளதாக காதலன் சந்தேகிக்கின்றார்.

அதே நேரம் காதலியின் அக்காவிடம் குறித்த வீடியோ அனுப்பபட்டது தொடர்பாக நாம் கேட்ட போது அவள் சிறுவயதில் இருக்கும் போது தனது கணவர் அவளை சிரிக்க வைக்க இவ்வாறு கிச்சுகிச்சு மூட்டுவதுவழமை. அதனை அவர் வீடியோவாக எடுத்து வைத்திருந்தாரோ தெரியாது. ஆனால் அவன் தனது தங்கையின் காதலை கொச்சைப்படுத்தி சொத்துக்களை அபகரிக்க முற்பட்ட கோபத்தில் கணவர் சில வேளை அந்த வீடியோக்களை அவனுக்கு அனுப்பியிருக்கலாம் என கூறினாள்.

காதலியிடம் குறித்த வீடியோ தொடர்பாக நாம் கேட்ட போது ‘தனது அத்தான் தான் சிறுவயதாக இருக்கும் போது குறித்த வீடியோவை எடுத்துள்ளதாக கூறியதுடன் தன்னுடன் எந்தவித உடல்உறவும் வைக்கவில்லை எனவும் அதற்கு தான் இடம்கொடுக்கவில்லை எனவும் கிச்சுகிச்சு மூட்டுவதாக கூறியே அத்தான் இவ்வாறு சில தடவைகள் சில்மிசம் செய்ததாகவும் தான் A/L எடுக்கும் காலத்தில் அத்தான் தப்பாக நடக்க முற்பட்ட போது கடும் எச்சரிக்கை கொடுத்தபின் அவர் அதன் பின் தன்னுடன் தப்பாக நடக்கவில்லை எனவும் காதலி சத்தியம் செய்துள்ளாள்.

இருப்பினும் சிறுமியாக இருந்த போது பாலியல் சில்மிசம் செய்தமை தொடர்பாபக தனது காதலியை பொலிசாரிடம் உடனடியாக முறையிடுமாறு காதலன் கோரிய போது மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்த பின்னரே காதல் தொடர்பு முறிவடையும் நிலைக்கு வந்ததாக காதலன் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த காதலி, தனது அத்தானை பொலிசாரிடம் முறையிட்டு சிறையில் அடைக்க முடியும் எனவும் தனது அக்கா, 2 குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குரியதாக மாறிவிடும் என தனது காதலனுக்கு தெரிவித்தும் அவர் அதனை புரிந்து கொள்ளாமல் இருப்பதாக கூறினார்.

தனது காதலி தனது அத்தானின் சில்மிசம் தொடர்பாகவும் அந்த வீடியோக்களை வெளியிட்டது தொடர்பாகவும் பொலிசாரிடம் முறையிட்டு அவனை கைது செய்து சிறையில் அடைப்பாள் என தான் நம்புவதாகவும் அவ்வாறு செய்தால் தான் அவளை நிச்சயம் திருமணம் செய்வேன் எனவும் காதலன் எமக்கு தெரிவித்துள்ளார். அத்தான் சில்மிசம் செய்த காட்சிகள் மற்றும் காதலியின் புகைப்படங்கள் போன்றவை எமக்கு காதலனால் அனுப்பபடவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சொத்துக்காக சொந்த தங்கையின் வாழ்க்கையையே அழிக்கும் அக்கா மற்றும் அத்தானின் சதி வலை தொர்பாக பல்கலையில் முக்கிய கற்கை நெறியினை கற்றுவரும் மாணவி அறியாது இருந்தாள் என்றால் அவளது வாழ்க்கை கேள்விக்குறியே…..

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments