Home புதினங்களின் சங்கமம் மஞ்சள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிறம் பூசி மோசடி அப்பா, மகன் உட்பட மூவர் கைது.!!...

மஞ்சள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிறம் பூசி மோசடி அப்பா, மகன் உட்பட மூவர் கைது.!! புது பெயின் என கண்டு பிடிக்காது இருக்க செய்த தந்திரம் என்ன தெரியுமா?

மஞ்சள் நிறத்திலான வெற்று எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிற வர்ணம் பூசி, அவற்றை லிட்ரோ (Litro) நிறுவனத்தின் சிலிண்டர்களாகக் காட்டி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டதெனியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் தந்தை மற்றும் மகனும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக வர்ணம் பூசப்பட்ட சிலிண்டர்கள் புதியவை எனத் தெரியாமல், பழைய பயன்படுத்தப்பட்ட சிலிண்டர்களைப் போன்று காட்சியளிக்கச் செய்வதற்காக விசித்திரமான உத்தியொன்றையும் கையாண்டுள்ளனர்.

இதற்காக சிலிண்டர்கள் மீது உணவுக் கழிவுகள், அப்ப மாவுக் கலவை மற்றும் மிளகாய்ச் சம்பல் போன்றவற்றைத் தடவி, சமையலின்போது உணவுப் பொருட்கள் சிதறி விழுந்து அழுக்கடைந்த பழைய சிலிண்டர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டதெனியாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments