வவுனியா – ஓமந்தை, கொந்தக்காரன்குளம் பகுதியில் காணாமல் போயிருந்த 60 வயதுடைய நபர் ஒருவர் இன்று (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அண்மையில் காட்டுப் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில், வீடு திரும்பாது காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து, பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து அவரைத் தேடும் பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், தேடுதல் நடவடிக்கைகளின் போது கொந்தக்காரன்குளம் பகுதியிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



