Home புதினங்களின் சங்கமம் யுவதியை மற்றவர்களுடன் படுக்க வைத்து நாள் ஒன்றுக்கு 700 டொலர்கள் உழைத்த புலம்பெயர் தமிழ்காவாலி நிதர்சனுக்கு...

யுவதியை மற்றவர்களுடன் படுக்க வைத்து நாள் ஒன்றுக்கு 700 டொலர்கள் உழைத்த புலம்பெயர் தமிழ்காவாலி நிதர்சனுக்கு 4 வருட கடூழிய சிறை! நாளொன்றுக்கு கிட்டதட்ட 15 பேருடன் படுத்த யுவதி! இணையதளத்தில் புக்கிங்!

கனடாவில் இளம் பெண்ணை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்திய தமிழர் ஒருவருக்கு கனடா நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

ஒன்டாரியோ மிஸிசாகா பகுதியில் வாழும் இலங்கையை சேர்ந்த 35 வயதான நிதர்சன் இளஞ்சூரியநாதன் என்பவரே இவ்வாறு தண்டனை பெற்றுள்ளார். பாலியல் கடத்தல், பொருள் நன்மைக்காக பாலியல் சேவைகளை விளம்பரப்படுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். 2020 ஆம் ஆண்டில் தனது குடும்பத்துடன் சண்டையிட்டு கடினமான சூழ்நிலையில் இருந்த 22 வயதான யுவதியை நிதர்சன் சந்தித்துள்ளார். இந்த யுவதியின் நண்பரான பிரட் ஜேம்ஸ் என்பவர் நிதர்சனை அறிமுகம் செய்து வைத்த பின்னர் இருவரும் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியான தொழிலுக்கு அமர்த்த திட்டமிட்டனர். அதற்கமைய யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை இணையதளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். வேலைக்கு சேரும் முன்னரே அந்த யுவதியை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தி பின்னர் பாலியல் ரீதியாகவும் தரம் பிரித்துள்ளனர். ஸ்கார்பரோவில் உள்ள ஒரு வீட்டில் அடித்தள அறையில் பாலியல் சேவைகளை வழங்குவதே முதல் வேலையாக இருந்தது. பின்னர் பிக்கரிங் நகருக்கு மாற்றப்பட்ட யுவதி 5 மணிநேரம் பாலியல் சேவைகளை வழங்கியுள்ளார். அவர் சோர்வடைந்து ஓய்வெடுக்க விரும்பிய போதும் அதற்கு மறுத்து மேலும் சந்திப்புகளை முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. 22 வயதான குறித்த யுவதி நாளாந்தம் சுமார் 12 வாடிக்கையாளர்களை எதிர்கொண்டு 700 டொலர்களை வருமானமாக பெற்றுள்ளார். எனினும் அந்தப் பெண் எவ்வளவு பணத்தை தனக்காக வைத்திருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் நீதிமன்றம் கேட்டறிந்துள்ளது. இதை அடுத்து அடுத்த ஐந்து நாட்களில் நிதர்ஷன் நண்பன் ஒருவரை பிக்கரிங் வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் ரீதியாக தாக்கியுள்ளார். இந்த பாலியல் தாக்குதலை தொடர்ந்து பிக்கரிங் வீட்டின் உரிமையாளர்களிடம் பெண் நடந்த பற்றி தெரிவித்த நிலையில் நிதர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதர்ஷன் இலங்கையில் பிறந்தவர் எனவும் வறுமையில் வாடியவர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர் உயர்நிலை படிப்பை முடித்திருந்தாலும் ஏற்கனவே ஆயுதம் ஏந்திய கொள்ளை மற்றும் பலவந்தமான சிறை வாசத்திற்காக தண்டனை பெற்றுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments