Home புதினங்களின் சங்கமம் பிருத்தானியாவில் ஈழத் தமிழரானதேவராசாவின் கடைக்குள் நடந்தது என்ன? ஒருவன் நாடு கடத்தப்படுகிறான்!! கடை உரிமம் ரத்து!!...

பிருத்தானியாவில் ஈழத் தமிழரானதேவராசாவின் கடைக்குள் நடந்தது என்ன? ஒருவன் நாடு கடத்தப்படுகிறான்!! கடை உரிமம் ரத்து!! 40000 பவுண்ஸ் அபராதம்!!

பிரித்தானியாவில் ஈழத்தமிழருக்குச் சொந்தமான கடையில் சட்டவிரோதமான செயல்பாடுகள் இடம்பெற்ற நிலையில், கடையின் உரிம ரத்துச் செய்யுமாறு பிரித்தானிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பாமிங்ஹாம் (Birmingham) நகரில், மாணவர் விசா காலாவதியான நபர் ஒருவரை சட்டவிரோதமாகப் பணியில் அமர்த்தியதோடு, அவருக்குக் குறைந்தபட்ச ஊதியத்தில் பாதியை மட்டுமே வழங்கி வந்த ஈழத்தமிழருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றுக்கு 40,000 பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அபராதத் தொகையைச் செலுத்தாத நிலையில், கடையின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அக்கடையின் விற்பனை உரிமத்தை ரத்து செய்யுமாறு பிரித்தானிய உள்துறை அமைச்சகம் விண்ணப்பித்துள்ளது. பாமிங்ஹாம் கிங் ஸ்டாண்டிங் பகுதியில் உள்ள காலேஜ் வீதியில் அமைந்துள்ள கடையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி காலை 9:30 மணியளவில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், உள்துறை அமைச்சகத்தின் குடிவரவு அமலாக்கப் பிரிவினர் குறித்த கடையில் திடீர் சோதனை நடத்தினர்.

இதன்போது இந்தியப் பிரஜை ஒருவர் கடையில் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தமை கண்டறியப்பட்டது. அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பெயரில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக தான் அங்கு பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். வாரத்தின் ஏழு நாட்களும், நாளொன்றுக்கு ஐந்து மணித்தியாலங்கள் வீதம் வேலை செய்ததாகவும், ஒரு மணித்தியாலத்திற்கு வெறும் 6 பவுண்டு மட்டுமே ஊதியமாகப் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கடையின் பணப்பெட்டியிலிருந்து தனது ஊதியத்தைத் தானே எடுத்துக்கொள்வதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த நபரின் மாணவர் விசா 2022 மே மாதத்துடன் காலாவதியாகியுள்ள நிலையில், அவர் விசா நீட்டிப்புக்காகப் பலமுறை விண்ணப்பித்தும் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குறித்த இளைஞன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இக்கடையின் உரிமையாளராக தேவராஜா ஹரிஹரன் என்பவரும், உரிமம் பெற்றவராக அன்டனி மில்ஸ் செபஸ்டியன் பிள்ளை என்பவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, அண்மையில் கடையின் உரிமத்தை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றுவதற்கான விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பணியாளரை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்னர் உரிய ஆவணங்களைச் சரிபார்க்கத் தவறியமையாலும், தொழிலாளியைப் பொருளாதார ரீதியாகச் சுரண்டியமையாலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் விதிகளைக் கடை நிர்வாகம் மீறியுள்ளதாக உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments