யாழ் நகரப்பகுதியில் உள்ள ஆட்டோத் தரிப்பிடங்களில் நிற்கும் ஆட்டோக்களுக்கு அருகே போய் நின்று குறித்த ஆட்டோச் சாரதிகளுடன் வேண்டுமென்று சண்டையை இழுத்து அதனை கைத்தொலைபேசியில் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் அவற்றை வெளியிட்டு தமக்கான அங்கிகாரத்தை தவறான முறையில் பெற்றுவருவதாக பிக்மி சாரதிகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் நாம் வெளியிட்ட தாடிக்கார ஆட்டோச்சாரதி தொடர்பாக அங்கு நின்ற ஏனைய ஆட்டோ சாரதிகள் எமக்கு அனுப்பியருந்த வீடியோ மற்றும் ஓடியோக்களை நாம் இங்கு வெளியிட்டுள்ளோம். குறித்த வீடியோவில் பிக்மி சாரதி வேண்டுமென்றே அந்த இடத்தில் போய் நின்று ஆட்டோ தரிப்பிடத்தில் நின்ற ஆட்டோச்சாரதிகளை வம்புக்கு இழுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதே வேளை இவ்வாறான பிக்மி சாரதிகள் சிலர் நவீன சந்தையில் உள்ள கடைகளுக்கு அருகே அவர்களின் கடைகளை மறைக்கும் வண்ணம் பாதையோரத்தில் தமது ஓட்டோக்களை நிறுத்தி ரவுடித்தனம் புரிவதாகவும் நவீனசந்தையில் கடைகள் வைத்திருக்கும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Home புதினங்களின் சங்கமம் ”சண்டைக்கு வாடா.. என்னோட சண்டைக்கு வாடா” யாழில் வடிவேலு பாணியில் ஆட்டோக்காரர்களை சண்டைக்கு இழுக்கும் பிக்மி...





