Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சி யுவதி கூட்டு வல்லுறவில் அதிர்ச்சித் தகவல்!! வல்லுறவுக்கு உள்ளாக்கிய 7 பேரில் 3 பேர்...

கிளிநொச்சி யுவதி கூட்டு வல்லுறவில் அதிர்ச்சித் தகவல்!! வல்லுறவுக்கு உள்ளாக்கிய 7 பேரில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள்!! அதில் இருவர் இரட்டையர்கள்!! இன்னொரு அண்ணன் ஏற்கனவே பாலியல் வல்லுறவு வழக்கில் சிறையில்!!

கடந்த தீபாவளி தினத்தன்று கிளிநொச்சியில் 26 வயதுடைய பெண் ஒருவர் ஏழு பேர் கொண்ட இளைஞர் குழுவினரால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஏழு பேரில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எனவும், அவர்களில் ஒருவர் அண்ணனாகவும் ஏனைய இருவர் இரட்டைப் பிறவிகளான சகோதரர்களாகவும் காணப்படுகின்றனர்

மேலும், ஏனைய சந்தேகநபர்களில் ஒருவரின் அண்ணன், மூன்றரை வயதுக் குழந்தை ஒன்றைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் தற்போது சிறையில் இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இதன் பின்னணியில் உள்ள சமூகப் பிரச்சினைகள் குறித்தும் ஆழமாக ஆராய வேண்டியுள்ளது.

குறித்த இளைஞர்களின் குடும்பப் பின்னணிகள் தொடர்பாகவும் பல்வேறு கவலைக்குரிய தகவல்களைப் பிரதேச மக்கள் முன்வைக்கின்றனர். போதைப்பொருள் பாவனை, கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை, குடும்பப் பொறுப்பின்மை மற்றும் சமூக ஒழுக்கச் சீர்கேடுகள் போன்றவை அவர்களுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றன.

மேலும், இவர்கள் ஏற்கனவே பல்வேறு வன்முறைச் சம்பவங்களிலும் சட்டவிரோத மற்றும் சமூக விரோதச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குடும்பங்களிலும் சமூகத்திலும் உருவாகும் சீர்கேடுகளை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு தடுக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது?

குடும்பச் சிதைவு, போதைப்பொருள் பாவனை, வன்முறைச் சூழல் போன்ற சமூகப் பிரச்சினைகளைப் புறக்கணித்துவிட்டு இத்தகைய சம்பவங்களைத் தடுத்துவிட முடியாது.

ஒரு பெண்ணின் பாதுகாப்பு என்பது அவளுடைய தனிப்பட்ட பிரச்சினையல்ல; அது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு. எனவே எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க ஒரு சமூகமாக கூட்டு செயற்பாட்டுக்கு செல்ல வேண்டும்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments