அம்பாறை மாவட்டம், கல்முனைப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கடந்த 5 நாட்களாகக் காணாமல் போயுள்ளதாகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் அவரது கணவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்முனையிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய இவர், இதுவரை வீடு திரும்பாத நிலையில் யாழ்ப்பாணம் – நெல்லியடிப் பகுதிக்குச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
காணாமல் போனவர் தொடர்பான விவரங்கள் வருமாறு:
பெயர்: சுப்ரமணியம் கற்பகக்கரசு
முகவரி: இல. 29/2, கடற்கரை வீதி, கல்முனை – 2A
குடும்ப விவரம்: மூன்று பிள்ளைகளின் தாய் (14 வயதுடைய ஒரு பெண் பிள்ளை, 10 வயதுடைய ஆண் பிள்ளை மற்றும் 6 வயதுடைய ஆண் பிள்ளை).
இச்சம்பவம் தொடர்பில் கணவரினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, கல்முனைத் தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மூன்று சிறு பிள்ளைகளின் தாயான இவரைப் பற்றிய ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், உடனடியாகக் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவித்து உதவுமாறு குடும்பத்தினர் பொதுமக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்பு இலக்கங்கள்: 071 419 6223 / 074 278 1199





