Home புதினங்களின் சங்கமம் யாழ் விபத்தில் மகனுடன் இறந்தது அரசபுலனாய்வாளர்!! பொலிசாரே திட்டமிட்டு கொன்றார்களா? அதிர்ச்சித் தகவல்கள் இதோ! வீடியோ

யாழ் விபத்தில் மகனுடன் இறந்தது அரசபுலனாய்வாளர்!! பொலிசாரே திட்டமிட்டு கொன்றார்களா? அதிர்ச்சித் தகவல்கள் இதோ! வீடியோ

யாழ் சாவகச்சேரியில் மகனுடன் செல்லும் போது இடித்துக் கொல்லப்பட்ட 51 வயதான செல்வராஜ் அரசபுலனாய்வாளர் (SIS) எனத் தெரியவருகின்றது. இவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் வர்த்தகநிலையம் ஒன்றைய நடாத்தி வருவது என்ற போர்வையில் அரச புலனாய்வாளராக செயற்பட்டு வந்துள்ளார். யுத்த கால நடவடிக்கைகளின் போது புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை காண்காணிப்பதில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.  இவ்வாறான நிலையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுடன் பொலிசாருக்கு உள்ள தொடர்புகளை இவர் கொழும்பில் உள்ள உயர்மட்டங்களுக்கு தெரியப்படுத்தி வந்துள்ளதாகவும் அதனால் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே இவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விக்கி என்று அழைக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் விக்ரமரட்ண மற்றும் ஒரு சில பொலிசாரால் மிகவும் நுட்பமாக திட்டமிடப்பட்டு போதைப்பொருள் கடத்தும் காவாலிகளை வைத்து கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் எமது வம்பன் புலனாய்வு ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவர் தற்போது SIS இல் இருந்து விலகியிருப்பதாக குறித்த துறையினர் தெரிவித்துள்ள போதும் அதனை நம்பமுடியாதுள்ளது. பெரும்பாலனா தமிழ் பேசும் SIS உறுப்பினர்கள் குறித்த துறையிலிருந்து விலகிவிட்டதாக தெரிவித்து வருவதுடன் பலர் புலம்பெயர் நாடுகளுக்கு சென்று அங்கு தமது புலனாய்வு நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

விபத்து என்ற போர்வையில் வாகனத்தால் அடித்துக் கொன்றுவிட்டு அப்பகுதியில் கூடிய பொதுமக்களின் கண்களுக்கு மது போதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்ற கோணத்தில் சிந்திக்க வைத்துவிட்டு காவாலிகள் தப்பி ஓடியுள்ளார்கள். தப்பி ஓடிய காவாலிகளை பாதுகாப்பாக பதுங்கியிருக்கச் செய்த பொலிசார் இன்னொரு காவாலியான இநதுஜன் என்ற போதைப்பொருள் பாவனையாளனை தானே இடித்ததாக கூறி சரணடைய வைத்து அவனை வைத்தியப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார்கள். விபத்தை ஏற்படுத்திய வாகனம் உடனடியாகவே பொலிசாரால் திட்டமிட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தை இயங்கச் செய்வதற்கான சாவியைக் கூட பொலிசார் வாகனத்தில் இருந்தவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டே மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வாகனத்தை கொண்டு சென்றுள்ளார்கள்.

இந்துஜனை சரணடையச் செய்து பின்னர் அவனிடம் மேற்கொண்ட விசாரணைகளில் ஏனையவர்களை பிடித்துள்ளதாக பீலா விட்டுள்ள சாவகச்சேரிப் பொலிசார் அதன் பின்னர் இந்துஜன் வாகனத்தை செலுத்தவில்லை. பிடிபட்டவர்களில் ஒருவனே வாகனத்தைச் செலுத்தியது என கூறி இந்துஜனையும் காப்பாற்றி வாகனத்தால் இடித்தவனையும் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற முற்பட்டுள்ளனர். வாகனத்தால் செல்வராஜை இடித்தவன் 3 நாள் கழிந்த பின் பிடிபட்டுள்ளதால் அவன் பாவித்த போதைப்பொருள் தொடர்பாக பரிசோதனை செய்ய முடியாது என்பதால் பொலிசார் மிகவும் தந்திரமாக அவனையும் காப்பாற்றியுள்ளார்கள்.

மிகவும் திட்டமிட்டு சாவகச்சேரிப் பொலிசார் சிலரால் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூலம் செய்யப்பட்ட கொலையே இதுவாகும் என தெரியவருகின்றது.

பொலிஸ் உத்தியோகத்தர் விக்ரமரட்ண

May be an image of text

போதைப்பொருள் கடத்தல்காரன் இந்துஜன்

May be an image of one or more people, beard and motorcycle

May be an image of van and ambulance

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments