மட்டக்களப்பு கல்குடா விடுதியில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் தமிழ் இளைஞர் மீது பெண்கள் தாக்குதல் நடாத்தியுள்ளார்கள்.
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் இயங்கி வந்த விடுதியொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழைச்சேனை விபுலானந்தர் வீதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் குறித்த விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் நிலையில் அங்கிருந்த சிங்களப் பெண்கள் அவரைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.





