Home புதினங்களின் சங்கமம் மட்டு’வில் இராணுவ ரக் மோதி குடும்பஸ்தர் பலி!

மட்டு’வில் இராணுவ ரக் மோதி குடும்பஸ்தர் பலி!

மட்டக்களப்பு, கிரான் – தொப்பிக்கலை வீதியில் இராணுவ ட்ரக் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (15) காலை 8.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், திகிலிவெட்டை, நாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த 52 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று காலை கிரானிலிருந்து தொப்பிக்கலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள வீதி வளைவுப் பகுதியில் தொப்பிக்கலையிலிருந்து கிரான் நோக்கி வந்த இராணுவ ட்ரக் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

இதில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய இராணுவ ட்ரக் வண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments