மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலைநகர் கிராமத்தில் இன்று (14.11.2026) சற்றுமுன்னர் இடம்பெற்ற தீ விபத்தில் சேகு இஸ்மாயில் எனும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் குடும்பத் தகராறு காரணமாக இருக்கலாம் எனப் பிரதேசத்தில் பேசப்பட்டு வருகின்ற போதிலும், இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல்கள் கிடைக்கும்போது அறியத்தரப்படும்.




