Home புதினங்களின் சங்கமம் இலங்கையை அதிர வைத்த சம்பவம் – 5 மாதமாக காணமல் போன 15 வயது மாணவி!...

இலங்கையை அதிர வைத்த சம்பவம் – 5 மாதமாக காணமல் போன 15 வயது மாணவி! குகைக்குள் குடும்பம் நடத்தி குழந்தை பெற்று 2 மாத கைக்குழந்தையுடன் மீட்பு! கர்ப்பமாக்கிய இளைஞன் எங்கே? பிரசவம் எப்படி நடந்தது தெரியுமா?

உடுதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீமுரே கனதகெட்டிய – தம்படே பகுதியில், சுமார் 5 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன 15 வயது பாடசாலைச் சிறுமி, அடர்ந்த வனப்பகுதியில் கற்குகை ஒன்றுக்குள் குழந்தையைப் பிரசவித்து 2 மாத குழந்தையுடன் வாழ்ந்து வந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

கித்துள் கைத்தொழில் நடைபெறும் பகுதியில் அதிகளவான அரிசியை நாளாந்தம் கொள்வனவு செய்து சென்ற 23 வயது இளைஞன் மீது சந்தேகம் கொண்ட உடுதும்பர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள், அவரை இரகசியமாகப் பின்தொடர்ந்து சென்றபோது மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெகு தொலைவிலுள்ள குகையில் தங்கியிருந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்.

எந்தவித மருத்துவ வசதிகளுமின்றி குகைக்குள்ளேயே சிறுமி குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

கித்துள் கைத்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோலினால் குழந்தையின் தொப்புள் கொடி வெட்டப்பட்டுள்ளது.

காட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட கைமருந்துகள் தாய்க்கும் சேய்க்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், கித்துள் பாணி காய்ச்சும் சட்டியிலேயே குழந்தை குளிப்பாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 23 வயது இளைஞனும், அவருக்கு உதவி செய்த 36 வயது மாமனும் உடுதும்பர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இளம் தாயும் இரண்டு மாதக் குழந்தையும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டு, மேலதிக மருத்துவ சிகிச்சைகளுக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments