Home புதினங்களின் சங்கமம் பிருத்தானியாவில் இலங்கைத் தமிழனின் கடைக்குள் நுளைந்த கொள்ளையர்கள் மீது சினிமா பாணியில் அதிரடி தாக்குதல் நடாத்திய...

பிருத்தானியாவில் இலங்கைத் தமிழனின் கடைக்குள் நுளைந்த கொள்ளையர்கள் மீது சினிமா பாணியில் அதிரடி தாக்குதல் நடாத்திய ஜெயந்தன்! வீடியோ

பிரித்தானியாவில் தமிழருக்குச் சொந்தமான கடைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்களை, சினிமா பாணியில் முறியடித்த தமிழர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சைனிரோ மில் டெடர்ஸ் (Cinderhill Mill Taders) வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில், துப்பாக்கிச் சூட்டு அச்சுறுத்தலுடன் கூடிய கொள்ளை முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த அச்சுறுத்தலை கடையின் உரிமையாளரான 51 வயதான ஜெயந்தன் டேவிட் என்பவர் மிகவும் திறம்படவும் வீரத்துடனும் முறியடித்துள்ளார்.

ஜெயந்தன் டேவிட் கடந்த 15 மாதங்களாக இந்தக் கடையை நடத்தி வருகிறார். அத்துடன், கடந்த 11 வருடங்களுக்கு மேலாக இந்தப் பகுதியில் வியாபாரம் செய்து வருவதால், உள்ளூர் மக்களிடையே மிகவும் பிரபலமானவராகவும் விளங்குகிறார். தனது திகில் நிறைந்த அனுபவம் குறித்து அவர் தெரிவிக்கையில்:

“காலையில் வழக்கம் போல் 10 மணியளவில் வேலைக்கு வந்தேன். காலை 11:30 மணியளவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் திடீரென கடைக்குள் நுழைந்தார். மூடியைக் கழற்றுமாறு நான் கூறியபோது, அவர் கையில் துப்பாக்கி இருப்பதை கவனித்தேன். பணத்தைக் கேட்டு மிரட்டிய கொள்ளையனிடம், ரொக்கப் பணம் எதுவும் இல்லை, சில்லறைகள் மட்டுமே உள்ளன என்று கூறினேன். உடனடியாக சுதாரித்துக்கொண்டு கடைக்கு வெளியே வந்து ஷட்டரை மூடத் தொடங்கினேன். கதவைப் பூட்ட நேரமில்லாததால் அதை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன். கொள்ளையன் ஷட்டருக்கு அடியால் தப்பிச் செல்ல முயன்றபோது, அவன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிவிட்டு அதை எட்டி உதைத்தேன். அப்போது அங்கு வந்த மற்றொரு நபர் எனக்கு உதவுவார் என்று நினைத்தேன்; ஆனால், அவன் கொள்ளையனை என்னிடமிருந்து விடுவித்து அழைத்துக்கொண்டு இருவருமாகத் தப்பி ஓடிவிட்டனர். இது மிகவும் பயங்கரமான அனுபவமாக இருந்தது” என்றார்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த நார்தம் பிரியாபுலி (Northamptonshire Police) காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனைகளை மேற்கொண்டனர். சிசிடிவி (CCTV) காட்சிகளைச் சேகரித்ததுடன், கைரேகை நிபுணர்களும் தடயங்களைச் சேகரித்தனர். இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. மேலும், சந்தேகத்திற்குரிய துப்பாக்கியையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

அச்சுறுத்தல்கள் எதுவாக இருந்தாலும் தனது கடை வழக்கம் போல் இயங்கும் என்றும், இந்தச் சம்பவத்தால் தான் முடங்கிப் போய்விடப் போவதில்லை என்றும் ஜெயந்தன் டேவிட் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments