Home புதினங்களின் சங்கமம் பாம்பு வீட்டுக்குள் நுழைந்து விட்டது என கூறி கதவை திறக்கச் செய்து இரு பெண்களை கட்டி...

பாம்பு வீட்டுக்குள் நுழைந்து விட்டது என கூறி கதவை திறக்கச் செய்து இரு பெண்களை கட்டி வைத்துவிட்டு மருமகள் மீது பாலியல் வல்லுறவு! கோவில் வீதியில் சம்பவம்!

தோட்டத்தில் பாம்பு புகுந்துவிட்டதாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்த நபர், அங்கிருந்தவர்களைக் கட்டிப்போட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று ராகம, குருகுலாவ பகுதியில் பதிவாகியுள்ளது.

குருகுலாவ கோயில் வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிலேயே இந்த சம்பவம் அரங்க்கேரியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதிய பெண்களை கட்டிவைத்து தாக்குதல்
கடந்தவாரம் இடம்பெற்ற இச்சம்பவத்தில், சந்தேகநபர் வீட்டிற்கு வந்து, தோட்டத்தில் பாம்பு புகுந்துவிட்டதாகக் கூறி அங்கிருந்தவர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, பலவந்தமாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்த 85 மற்றும் 79 வயதுடைய இரு முதிய பெண்களைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு, அவர்களின் கை, கால்களைக் கட்டி, வாயில் துணிகளைத் திணித்து, அவர்களை வீட்டின் இரு வெவ்வேறு அறைகளில் அடைத்து வைத்த நிலையில் , அவர்களின் 49 வயதுடைய மருமகள் வீட்டிற்குள் நுழைந்தபோது, ​​சந்தேகநபர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் மற்றும் துன்புறுத்தல்களுக்குப் பிறகு, வீட்டிலிருந்த பணம் மற்றும் பெருமதிப்புமிக்க நகைகளைக் கொள்ளையடித்துக்கொண்டு சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேகநபரின் கொடூரத் தாக்குதலில் காயமடைந்த 85 மற்றும் 79 வயதுடைய முதிய பெண்கள், தற்போது ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான 49 வயது பெண்ணை, ராகம வைத்தியசாலையின் தடயவியல் மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற சந்தேகநபர், பின்னர் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments