Home புதினங்களின் சங்கமம் திருகோணமலையில் கைலாசப்பிள்ளை வினோதரனுக்கு மரண தண்டனை.! அப்பா கைலாசபிள்ளைக்கு கைலாசம் காட்டியதால் கொடுக்கப்பட்ட தண்டனை!

திருகோணமலையில் கைலாசப்பிள்ளை வினோதரனுக்கு மரண தண்டனை.! அப்பா கைலாசபிள்ளைக்கு கைலாசம் காட்டியதால் கொடுக்கப்பட்ட தண்டனை!

திருகோணமலையில் தந்தையைப் பொல்லால் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 35 வயதுடைய கைலாசப்பிள்ளை வினோதரனுக்கு மரண தண்டனை விதித்து, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (22) தீர்ப்பளித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி, தோப்பூர், பாலத்தடிச்சேனை பகுதியில் மதுபோதையில் இருந்த வினோதரன், தனது 59 வயதுடைய தந்தையாயை பொல்லால் தாக்கிக்கொலை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட பின்னர், 2024ஆம் ஆண்டு திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

விசாரணைகளின் முடிவில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட வினோதரனுக்கு, தண்டனைச் சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழ் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments