பேஸ்புக் வலைத்தளத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்களின் பேஸ்புக் கணக்கினை குறி வைத்து அதற்காக பேஸ்புக் விளம்பரம் செய்து பெண்களை தமது வலைக்குள் விழ வைக்கும் தந்திரங்களை பல கில்லாடிகள் செய்து வருவதாகத் தெரியவருகின்றது. இதில் முக்கியமாக பெண் உறுப்பை சிறிதாக்கும் கிறீம், முகம் மற்றும் அங்குள், பெண் உறுப்பு போன்றவற்றை வெள்ளையாக்கும் கிறீம் மற்றும் பெண்களுக்கான பாலியல் உபகரணங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் விளம்பரங்களும் பெண்களுக்கு வீடுகளில் வந்து மசாஜ் செய்யப்படும் என்ற பனர்களுடன் விளம்பரங்களும் பெண்களின் முகப்புத்தகத்திற்கு மாத்திரம் பார்வைக்கு வருவதாக தெரியவருகின்றது.
இதில் பாலியல் உபகரணங்கள் மற்றும் பெண் உறுப்புக்கான கிறீம் போன்றவற்றை விநியோகம் செய்யும் முக்கிய காவாலி ஒருவன் யாழ்ப்பாணத்தில் தன்னை வெளிநாட்டு ஏற்றுமதியாளனாக காட்டிக் கொள்ளும் ஒருவன் எனவும் குறிப்பாக பனங்கள்ளு ஏற்றுமதி மற்றும் பனை தொடர்பான பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் போர்வையில் உள்ளவன் எனவும் இவனது மனைவி பெண்களுக்கான அலங்காரங்கள் செய்து வருபவள் எனவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே வேளை பெண்களுக்காக வீடுகளுக்கு வந்து மசாஜ் செய்யப்படும் என பனர்களில் வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளும் பேது யாழ்ப்பாண ஆண்களின் குரல்களிலே அவர்கள் கதைப்பதாகத் தெரியவருகின்றது.
குறித்த நபர்களை வீடுகளுக்கு அழைத்து வந்து அவர்களை விசாரித்து கும்பாபிசேகம் கொடுப்பதற்கு இளைஞர் குழு ஒன்று ஆயத்தமாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.





