Home புதினங்களின் சங்கமம் கிணற்றுக்குள் வீழ்ந்த செல்லப் பூனையை காப்பாற்ற முற்பட்ட 32 வயது இமேஷிகா பலி!

கிணற்றுக்குள் வீழ்ந்த செல்லப் பூனையை காப்பாற்ற முற்பட்ட 32 வயது இமேஷிகா பலி!

இரவில் கேட்கப்பட்ட ஒலியொன்றைக் கவனித்து, கிணற்றில் தவறி விழுந்த தனது செல்லப் பூனையைக் காப்பாற்ற முயன்ற இளம்பெண் ஒருவர் எதிர்பாராத விபரீதத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் வரக்காபொல காவல் நிலையப் பிரிவில் பதிவாகியுள்ளது. தந்தைக்கு உதவியாக கிணற்றுக்கு வெளிச்சம் காட்டிக் கொண்டிருந்தபோதே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வரக்காபொல,பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இமேஷிகா என்ற திருமணமாகாத இளம் பெண்ணாவார். தந்தை, தாய் மற்றும் இளைய சகோதரருடன் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்த இவர், கையுறை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 20ஆம் திகதி இரவு 10 மணியளவில், தனது வீட்டின் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது வீட்டின் பின்புறத்திலிருந்து பூனைகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது. அவற்றில் ஒரு பூனை கிணற்றுக்குள் வீழ்ந்ததை உணர்ந்த அவர், உடனடியாகத் தனது தந்தையுடன் இணைந்து வீட்டின் அருகிலுள்ள கிணற்றுக்குச் சென்றுள்ளார். தரைமட்டத்திலிருந்து சுமார் மூன்று அடி உயரத்தில் பாதுகாப்புச் சுவரைக் கொண்டிருந்த அக்கிணற்றுக்கு அருகில் சென்று, தனது கைப்பேசி ஒளியைப் பாய்ச்சி நிலைமையை அவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

கிணற்றுக்குள் பூனை கிடப்பதைப் பார்த்த இருவரும், அதைக் கரையேற்றுவதற்காகக் கயிறு கட்டிய வாளியைத் தயார்ப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், மேலதிக உதவிக்காகத் தாயார் அண்டை வீட்டு உறவினர் ஒருவரின் வீட்டுக்கு விரைந்துள்ளார். இதன்போது, தந்தை கிணற்றுக்குள் வாளியைச் செலுத்த முற்பட்டபோது, அவருக்கு வெளிச்சம் காட்டும் நோக்கில் தினேத்ரி கிணற்றுக்கு அருகில் குனிந்து கைப்பேசி ஒளியை வீசியுள்ளார். அந்தத் தருணத்தில் எதிர்பாராதவிதமாக அவர் நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.

தாயார் அண்டை வீட்டு உறவினருடன் திரும்பி வருவதற்குள் இத்துயரச் சம்பவம் நடந்து முடிந்துள்ளது. உடனடியாகச் செயற்பட்ட அவ்வுறவினர் கிணற்றில் இறங்கிப் பெண்ணை மீட்டு நிட்டம்புவ – வதுபிட்டிவல மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கிணற்றுக்குள் வீழும் போது அங்கிருந்த கொங்கிறீட் பகுதியில் தலையில் பலத்த அடிபட்டதே மரணத்திற்குக் காரணமென்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம், அவரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறோம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments