Home புதினங்களின் சங்கமம் பிரான்ஸ் வன்முறையில் ஈழத்தமிழனின் நகைக் கடையில் 20 கோடி ரூபா தங்கம் கொள்ளை! கதறியழும் தமிழன்!...

பிரான்ஸ் வன்முறையில் ஈழத்தமிழனின் நகைக் கடையில் 20 கோடி ரூபா தங்கம் கொள்ளை! கதறியழும் தமிழன்! வீடியோ

பிரான்சில் தொடரும் வன்முறைச் சம்பவங்களில் தமிழர்கள் உட்பட பலரின் வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகள் உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது கொள்ளையர்களின் கரங்களில் சிக்கியுள்ளதாகக் கூறி பலரும் கவலை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், நேற்று முன்தினம் பாரிஸில் உள்ள ஈழத் தமிழருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 6 லட்சம் யூரோக்கள் பெறுமதியான தங்கம், நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரான டயமண்ட் ஹவுஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார். பிரான்சின் பாரிஸ், மார்செய், லியோன் மற்றும் லிமோஜ் உள்ளிட்ட நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டு, வாகனங்களுக்கும் பொதுக்கட்டிடங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன. இதில் பல தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்களின் பல வர்த்தக நிலையங்களும் அடங்கும்.

தொடர் வன்முறையால் பிரான்ஸ் அரசாங்கம் நிலை குலைந்து போயுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்த நிலையில் அமைதியான மாணவர் போராட்டமாக ஆரம்பித்து கடைகள் சூறையாடப்பட்டு பொதுச்சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்ட கலவரமாக இது மாறியுள்ளது.

ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. பிரான்சின் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதிகளுக்கு குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டங்கள், பின்னர் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான நாடு தளாவிய ஆர்ப்பாட்டங்களாக விரிவடைந்தன.

இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டவர்களையும், குடியேற்றவாசிகளையும் குற்றம் சாட்டும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேவேளை, வலதுசாரி அரசியல் சக்திகள் இக்கலவரங்களை குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாகப் பயன்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறறவுள்ள நிலையில், இந்த வன்முறைச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், தீவிர வலதுசாரியான மரீன் லூ பென் அம்மையாருக்கு பெரும் சாதகமாக அமையும் எனவும் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments