Home புதினங்களின் சங்கமம் பல்கலைக்கழக மாணவன் விபத்தில் பலி!

பல்கலைக்கழக மாணவன் விபத்தில் பலி!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று சுற்றுலாவுக்காக காலிப் பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்த போதே, மாணவர் ஒருவர் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து, எதிரே வந்த பாடசாலை வேன் ஒன்றில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்துக்குள்ளான மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு விபத்தில் உ**யி**ரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் 21 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments