புதினங்களின் சங்கமம்

யாழில் கள்ளக்காதலியுடன் அத்தான்!! தட்டிக் கேட்ட மச்சான் கொலை!! நடந்தது என்ன?(photos)

யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை
செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையும் மகனும் தலைமறைவாகியுள்ளனர் என்று
யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“இளைஞனை அவரது மூத்த சகோதரியின் கணவரே கொலை செய்தார். சகோதரியின் கணவருக்கு
வேறொரு பெண்ணுடன் தொடர்பு உண்டு. அந்தப் பெண்ணை தேடிச் சென்ற இளைஞன் தனது சகோதரியின்
வாழ்க்கையைப் பாழாக்கவேண்டாம் என்று கண்டித்து வந்துள்ளார்.

இளைஞன் தன்னை மிரட்டியதாக அந்தப் பெண் கொலை செய்தவருக்கு தகவல் வழங்கியது.

அதனால் சகோதரியின் கணவரின் தந்தை வீதியால் சென்ற இளைஞனைப் பிடித்து வைத்திருக்க
சகோதரியின் கணவர் கோடாரியால் தலையில் பலமாக அடித்ததுடன், கண்மூடித்தனமாக இளைஞனைத்
தாக்கியுள்ளனர்.

கொலை செய்த இருவரும் தலைமறைவாகியுள்ளனர்” என்று நீதிவான் முன்னிலையில் பொலிஸார்
தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், அரியாலை – மணியம் தோட்டம் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை
(ஒக்.15) மாலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் மணியந்தோட்டம் 5ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த கொன்ஸ்ரன் கலஸ்ரன் (வயது-33)
என்பவரே கொலை செய்யட்டார்.

சம்பவ இடத்துக்கு இன்று புதன்கிழமை சென்ற யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல்
விசாரணைகளை முன்னெடுத்தார். அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள
இளைஞரின் சடலத்தையும் நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் இளைஞனின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிவான்
ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.