Home புதினங்களின் சங்கமம் அப்பாவும் அம்மபாவும் அரச உத்தியோகத்தர்கள்!! காதலியின் புகைப்படத்தின் முன் 19 வயது மாணவன் அம்றிதன் மரணம்!!

அப்பாவும் அம்மபாவும் அரச உத்தியோகத்தர்கள்!! காதலியின் புகைப்படத்தின் முன் 19 வயது மாணவன் அம்றிதன் மரணம்!!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்னியார் வீதியிலுள்ள வீடு ஒன்றில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வந்த இருதயநாதர் அம்றிதன் (வயது 19) என்ற மாணவன் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த மாணவன் நள்ளிரவு வரை பாண்டிருப்புப் பகுதியைச் சேர்ந்த தனது காதலியான சக பாடசாலை மாணவியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அதன் பின்னர், தனது பணப்பையில் இருந்த காதலியின் புகைப்படத்தை அறையில் காட்சிப்படுத்திய மாணவன், தனது கையை வெட்டியுள்ளார். இதன்போது ஏற்பட்ட அதிக இரத்தப்போக்குடன், தனது தாயாரின் சேலையின் உதவியால் வீட்டின் வெளியில் உள்ள மேல் தளத்தில் தூக்கில் தொங்கியுள்ளார். அத்துடன், தூக்கில் தொங்கும்போது ஏற்படும் சத்தம் வெளியில் கேட்காமல் இருப்பதற்காகத் துணியொன்றையும் தனது வாயில் திணித்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவன் நான்கு மாதங்களுக்கு முன்னரே தனது தந்தையை இழந்துள்ளார். இவரது தந்தையும் தாயாரும் அரச உத்தியோகத்தர்கள் என்பதுடன், இவருக்கு இரு சகோதரிர்களும் உள்ளனர். தந்தை மறைந்த சோகத்தில் இருந்து மீளுமுன் இச்சம்பவம் இடம்பெற்றமை குடும்பத்தினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில், கல்முனைத் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த களுஆராச்சியின் வேண்டுகோளுக்கிணங்க, திடீர் மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில் முதற்கட்ட விசாரணைகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சட்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் எஸ்.எம். றிபாஸ்டீன் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது தூக்கில் தொங்கியதால் கழுத்தில் ஏற்பட்ட இறுக்கம் காரணமாக மூச்சுக்குழாய் தடைப்பட்டு மரணம் சம்பவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனைத் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments