Home புதினங்களின் சங்கமம் பிருத்தானியாவில் பல ஆண்டுகளாக பெண் ஒருவரை பாலியல் சித்திரவதை செய்த தமிழ் காவாலிக்கு 17 வருட...

பிருத்தானியாவில் பல ஆண்டுகளாக பெண் ஒருவரை பாலியல் சித்திரவதை செய்த தமிழ் காவாலிக்கு 17 வருட சிறை!

பிரித்தானியாவில் பெண் ஒருவரை பல வருடங்களாக கொடுமைப்படுத்திய தமிழ் இளைஞனுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பிரித்தானியாவில் பல ஆண்டுகளாக ஒரு பெண்ணுக்கு எதிராக தொடர்ச்சியான பாலியல் வல்லுறவு, வன்முறை மற்றும் கட்டுப்படுத்தும் சித்திரவதைகளை புரிந்து வந்த தமிழ் இளைஞனுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 33 வயதான ரஜுவ் ஹரிகிருஷ்ணன் என்ற குற்றவாளிக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடுவர் மன்றம் ஒருமனதாக ரஜுவ் ஹரிகிருஷ்ணனை பல்வேறு குற்றங்களில் குற்றவாளி என அறிவித்துள்ளது. கட்டாயப்படுத்தி கட்டுப்படுத்தும் நடத்தை, வேண்டுமென்றே தொண்டையை நெரித்து கொல்ல முயன்றமை, கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க முயன்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும். இது தவிர, நீதிமன்ற தடை உத்தரவை இரண்டு முறை மீறிய குற்றச்சாட்டுகளையும் ரஜுவ் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் பல வருடங்களாக உடலியல், பாலியல் மற்றும் உளவியல் ரீதியான கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த புலனாய்வு அதிகாரி மரிசா சாம்பர்லேண்ட், பாதிக்கப்பட்ட பெண் காட்டிய தைரியமும் மனஉறுதியுமே இந்தத் தண்டனைக்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி உண்மையை வெளிக்கொண்டு வந்த அவருக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாலியல் மற்றும் குடும்ப வன்முறைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments