Home புதினங்களின் சங்கமம் வெள்ளைத்துணியால் மூடப்பட்டு யாழ்.நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்ட திலீபன் சிலை!

வெள்ளைத்துணியால் மூடப்பட்டு யாழ்.நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்ட திலீபன் சிலை!

நல்லூரில் இருந்து அகற்றப்பட்ட தியாக தீபம் திலீபனின் சிலை இன்று (5) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் பாரப்படுத்தப்பட்டது.

நல்லூரில் நினைவேந்தல் நிகழ்வுக்காக வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை கடந்த 27ஆம் திகதி பொலிஸாரால் அகற்றப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிலையை நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.

எனினும், குறித்த வழக்கில் சந்தேகநபர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாத நிலையில், சிலையை பொறுப்பேற்க நீதிமன்றம் முன்னதாக மறுப்பு தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, சிலை தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த எட்டு நாட்களாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை இன்று நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது.

பொலிஸ் நிலையத்தில் இருந்து வெள்ளைத் துணியால் முழுமையாக மூடப்பட்ட நிலையில், பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட சிலை யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டு, நீதிமன்றக் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments