Home புதினங்களின் சங்கமம் போதைப்பொருள் விற்பனை செய்பவன் திலீபனுக்கு மாலை போடலாமா? கஜேந்திரர்களே என்ன இது?

போதைப்பொருள் விற்பனை செய்பவன் திலீபனுக்கு மாலை போடலாமா? கஜேந்திரர்களே என்ன இது?

தமிழ்த்தேசியம் என்று வந்தால் செத்த வீட்டில் சவமாகவும், கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும் நாங்கள்தான் நிற்க வேண்டும் என நினைப்பவர்கள் சைக்கிள் கட்சிக்காரர்கள். இலங்கையில் சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை எதிர்க்க வேண்டும் என்ற கொள்கை சைக்கிள் கட்சிக்கு உள்ளது.

அவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ளலாம்; ஏனெனில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது. அந்தக் கொள்கைகளில் அவர்கள் தீவிரமாக இருப்பது அவர்களின் உறுதியான நிலைப்பாடாக இருக்கலாம்.

ஆனால், சைக்கிள் கட்சியில் உள்ளவர்களில் பலர் போதைப்பொருள் வியாபாரிகளாகவும் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களாகவும் காணப்படுகின்றார்கள். விடுதலைப் புலிகள் இலங்கையின் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை எதிரத்துப் போராடியபோது கூட, தமது பிரதேசங்களில் காவாலிகள், போதைப்பொருள் வியாபாரிகள், கொள்ளையர்களைக் கூண்டுடன் அழித்துத் துடைத்தெறிந்திருந்தனர். இது புலிகளின் காலத்தில் வாழ்ந்த அனைவருக்கும் தெரிந்த விடயம்.

அவ்வாறான ஒரு அமைப்பில் இருந்து, அகிம்சை வழியில் போராடி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் உருவச்சிலைக்கு, யாழ் அரசடிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட ‘அத்தான்’ என அழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரியும் ரவுடியுமான ஒருவன் மாலை அணிவிப்பது என்பது எவ்வாறு சாத்தியமானது?

திலீபன் உயிருடன் இருந்திருந்தால், இவ்வாறான காவாலிகளைச் சேர்த்து வைத்திருந்ததற்காக இந்த ‘அத்தான்’ உட்பட கஜேந்திரன்களும் காணாமல் போயிருப்பார்கள்.

இவ்வாறான கீழ்த்தரமானவர்களைச் சைக்கிள் கட்சி தம்வசம் வைத்திருப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகள் ஊடகங்களுக்கு இவர்கள் தொடர்பான புகைப்படங்களை அனுப்பியுள்ளன. அதுவும் இவர்கள் எவ்வாறான குற்றவாளிகள் என்ற ஆதாரங்களுடன் அவர்கள் ஊடகங்களுக்குத் தகவல்களை அனுப்புகின்றார்கள்.

இதேவேளை, அரச புலனாய்வுத் துறையினர் ஊடகங்களுக்கு அனுப்பிய தகவல்களில், திலீபனின் சிலை கண்ணாடியிழையால் (Fiber glass) ஆக்கப்பட்டதே தவிர வெண்கலச் சிலை அல்ல என்றும்; அந்தச் சிலை புதுக்குடியிருப்புப் பகுதியில் உருவாக்கப்பட்டு, ஒரு லட்சத்திற்கும் குறைவான பணமே அதற்குச் செலவு செய்யப்பட்டது என்றும்; ஆனால், புலம்பெயர் தேசத்திலிருந்து அந்தச் சிலைக்கான செலவாக 87 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் உண்மையாயின் மிகுதிப் பணம் எங்கே?

கஜேந்திரன்களே… தூய தமிழ்த்தேசியத்தின் வழியில் நீங்கள் நிற்கின்றீர்கள் என்பதை மக்களும் உங்களின் எதிரிகளும் உணர்ந்துகொள்வதற்கும், அந்த வழியில் நீங்கள் நிற்பதாக மற்றவர்களுக்குக் காட்டிக்கொள்கின்றீர்கள் என மக்களும் உங்களின் எதிரிகளும் உணர்ந்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

ஏற்கெனவே தமிழரசு, சைக்கிள் கட்சி போன்றவற்றின் மீது தமிழ் மக்களுக்கு இருந்த கடுமையான வெறுப்பின் தீவிரம், கடந்த தேர்தலில் ஒரு பைத்தியத்தையும் மேலும் பல வெங்காயங்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தது.

அரச புலனாய்வுத் துறையின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த்தேசியத்திற்கு எதிராகச் செயற்படும் அருண் சித்தார்த்துக்கும், உங்களுடன் நிற்கும் ‘அத்தான்’ போன்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது?

குறிப்பு – இங்கு நாம் பிரசுரித்துள்ள புகைப்படங்கள் அரச புலனாய்வாளர்களால் ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களால் எமக்கு அனுப்பபட்டதாகும். இங்கு சிவப்பு குறியிட்டு காட்டப்பட்டுள்ளவர்கள் போதைப்பொருள் குற்றவாளிகள் என்பது எம்மால் உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments