Home புதினங்களின் சங்கமம் பிருத்தானியாவில் ஈழத்தமிழ் இளைஞன் மரணம்! ஏன் இந்த முடிவை எடுத்தான்?

பிருத்தானியாவில் ஈழத்தமிழ் இளைஞன் மரணம்! ஏன் இந்த முடிவை எடுத்தான்?

பிரித்தானியாவில் புகலிடம் கோரிய நிலையில் மூன்றாம் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
36 வயதான KP என அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்படும் ஈழத்தமிழ் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேச நிர்வாகத்தினால் சுமார் 5 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த இளைஞன், ஆப்பிரிக்க நாடான எஸ்வாதினியில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு டியாகோ கார்சியா தீவுக்கு அருகில் படகு மூலம் பயணித்தவேளை உயிரிழந்த இலங்கை இளைஞன் மீட்கப்பட்டார். சர்வதேச பாதுகாப்பு அங்கீகாரம் வழங்கப்பட்ட போதிலும், பிரித்தானியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் பல்வேறு நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தடுப்பு முகாமில் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் குற்றச்சாட்டுகள் காரணமாக பிரித்தானியா செல்ல இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அமெரிக்க-ஈரான் போர் காரணமாக மாலத்தீவுக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து எஸ்வாதினி நாட்டிற்கு நிரந்தரமாக குடியமர்த்துவதற்காக பிரித்தானிய அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி எஸ்வாதினியின் தலைநகரில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் KP தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய அரசாங்கத்தினால் சர்வதேச பாதுகாப்பு அளிக்கப்பட்ட ஒரு புகலிடக் கோரிக்கையாளர் மூன்றாம் நாடு ஒன்றுக்கு அனுப்பப்பட்டு உயிரிழந்த முதல் சம்பவம் இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் தனது சொந்த நாட்டில் சித்திரவதைக்கு உள்ளானவர் என்பதும், 5 ஆண்டு கால தடுப்புக் காவலில் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு पोलिसाாரும் பிரித்தானிய அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments