Home புதினங்களின் சங்கமம் இலங்கைக்கு போதைப்பொருட்களுடன் கனடாவிலிருந்து செல்ல முற்பட்ட காவாலி கனடா விமானநிலையத்தில் கைது!

இலங்கைக்கு போதைப்பொருட்களுடன் கனடாவிலிருந்து செல்ல முற்பட்ட காவாலி கனடா விமானநிலையத்தில் கைது!

கனடாவின் டொராண்டோ விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்ல முற்பட்ட பயணி ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பயணி கைது செய்யப்பட்ட நிலையில், சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

சந்தேகநபரிடமிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்படவிருந்த சட்டவிரோத போதைப்பொருட்கள் அடங்கிய பயணப்பைகளை கனடா எல்லை சேவைகள் முகவரகம் பறிமுதல் செய்துள்ளது. கடந்த 3-ஆம் தேதி இந்த போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் இடம்பெற்றதாக முகவரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் மொத்தம் 44 பொதிகளில ஷரிஷ் மற்றும் 13 பொதிகளில் கொகேன் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எல்லை சேவைகள் முகவரகத்தின் அதிகாரிகள் சோதனைகளின் போது ஏற்படும் அபாயங்களை முகவாண்மை செய்யும் வழிமுறைகள், உளவுத்துறை தகவல்கள், அதிநவீன கண்டுபிடிப்பு கருவிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய நடத்தைகளை அவதானித்து மேலதிக தீவிர பரிசோதனைகள் தேவையா என்பதை தீர்மானிக்கின்றனர் என முகவரகத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments