Home புதினங்களின் சங்கமம் சொகுசு பஸ் காருடன் மோதி தேசிய பாடசாலை அதிபர் பலி!

சொகுசு பஸ் காருடன் மோதி தேசிய பாடசாலை அதிபர் பலி!

தம்புள்ளை – ஹபரணை பிரதான வீதியின் பால்வெஹெரா பகுதியில் இன்று (18) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில், தம்புள்ளை தேசியப் பாடசாலையின் அதிபர் ஜனக விஜேசிங்க உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் பயணித்த அதிபர் செலுத்திய காருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோதலின் பின்னர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு கார் மற்றும் அருகிலிருந்த உணவகம் ஒன்றின் மீதும் மோதி நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காருக்குள் சிக்கிக்கொண்ட அதிபரை அப்பகுதி மக்கள் மீட்டு தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விபத்தின் போது பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments