மன்னார் செளத்பார் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, விலை உயர்ந்ததாகக் கருதப்படும் 67 கிலோவுக்கும் அதிகமான அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கலத்தின் வாந்தி கைப்பற்றப்பட்டுள்ளது.
2026 செப்டெம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற இந்த நடவடிக்கையின்போது, அம்பர் கிரிஸை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட அம்பர் கிரிஸ் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பர் கிரிஸின் வர்த்தகம் இலங்கையின் விலங்கின மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.





