Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சி பெற்றோல் செற் ஒன்றில் நடந்த பதபதைக்க வைக்கும் வாள் வெட்டுத் தாக்குதல்! CCTV video

கிளிநொச்சி பெற்றோல் செற் ஒன்றில் நடந்த பதபதைக்க வைக்கும் வாள் வெட்டுத் தாக்குதல்! CCTV video

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

டிப்பர் வாகனம் ஒன்றிற்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், அவ்வாகனத்தைச் சற்று முன்னோக்கி நகர்த்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையப் பணியாளர் கோரியுள்ளார். இதன் காரணமாகச் சாரதிக்கும் பணியாளருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

தனியே சென்ற டிப்பர் வாகனச் சாரதி, சிறிது நேரத்தின் பின்னர் மேலும் ஐந்து பேருடன் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்துள்ளார்.

அங்கு இருந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், முகாமையாளர், பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் ஒருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இத்தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments