யாழ் நல்லுாரில் ஹெல்மட் இல்லாது நிறை வெறியில் சென்ற காவாலிகள்!! ஒருவன் பலி!! மற்றொருவன் படுகாயம்!! வீதியில் கிடந்த சாராயப் போத்தல்கள்!! வீடியோ
நல்லூர் குறுக்குத் தெரு சந்திப்பில் நேற்று முன்தினம் (22) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்தில் காவாலி ஒருவன் உயிரிழந்ததுடன், மேலும் ஒரு காவாலி காயமடைந்துள்ளான்.
இவ்விபத்து நேற்று முன்தினம் இரவு சுமார் 11.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கந்தசாமி கோகுலதாஸ் என்பவன் உயிரிழந்துள்ளான். இவன் ஒரு பொறியியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவனுடன் பயணித்த சஞ்சீவன் என்பவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கார் முன்பகுதி மற்றும் மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளமை காணப்படுகிறது.
மேலும், சம்பவத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு காவாலிகளும் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததாகவும், அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த விடயம் தொடர்பான உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் பொலிஸ் அல்லது மருத்துவ பரிசோதனை மூலம் கிடைக்க வேண்டியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











