புதினங்களின் சங்கமம்

பெண்கள் பாடசாலையில் தனது மகளை சேர்க்கச் சென்ற இளவயது குடும்பஸ்தரிடம் பாலியல் லஞ்சம் கோரிய பெண் அதிபர்! தன்னுடன் ஒரு தடவையாவது படுக்குமாறு கெஞ்சினாராம்!

மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் தனது மகளைச் சேர்ப்பதற்காகச் சென்ற அரச ஊழியரான தந்தை ஒருவரிடம், பாடசாலையின் பெண் அதிபர் பாலியல் லஞ்சம் கோரியதாக குற்றம் சாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த அரச ஊழியர் அண்மையில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனம் ஒன்றுக்கு இடமாற்றம் பெற்று வந்தவர் என்பதுடன், மகளை பாடசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்காக பெண் அதிபரை சந்தித்த வேளையிலேயே அவர் இந்த சட்டவிரோத கோரிக்கையை விடுத்துள்ளதாக தந்தை அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், உத்தியோகபூர்வ விசாரணை முடிவடையும் வரை இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை அறிவிக்க முடியாது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x