தாயாரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி புதிய தொலைபேசி சிம் அட்டை ஒன்றைப் பெற்றுத் தருமாறு கோரி ஏற்பட்ட குடும்பத் தகராறு, 24 வயதுடைய காவாலி மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்துள்ளான்.
சுன்னாகத்தைச் சேர்ந்த குறித்த காவாலி, தனது தாயாரிடம் சிம் அட்டை எடுத்துத் தருமாறு வற்புறுத்தியுள்ளான். இதற்கு தாயார் சம்மதிக்காததால் இருவருக்குமிடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த காவாலி, வீட்டை விட்டு வெளியேறித் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு அருகில் உள்ள வயல் பகுதிக்குச் சென்றுள்ளான்.
அங்கே தனக்குத்தானே தீ வைத்துக்கொண்ட அவன், வலியின் தாக்கம் தாளாமல் அக் கணத்திலேயே அருகிலிருந்த வயல் கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் காவாலியின் சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
குறித்த காவாலிக்கு பனர் அடித்து அவன் ஏற்கனவே செய்த விசுப்புலாத்தி வேலைகளை றீல்ஸ்களாக சோக கீதம் போட்டு வெளியிட்டு அவனை கதாநாயகன் ரேஞ்சுக்கு கொண்டு சென்று பிரமாண்டமான முறையில் செத்தவீடு செய்ய முற்பட்டால் காவாலியின் பெயர் விபரங்கள், புகைப்படங்களுடன் கூடிய பதிவினை நாம் இங்கு பதிவிடுவோம்.
தமிழர் பிரதேசங்களில் கொழுப்பெடுத்து திரிந்து தற்கொலை செய்து கொள்பவர்கள் தொடர்பாக எந்தவித கரிசனையும் காட்டாது மனச்சாட்சிக்கு விரோதமாகவே பதிவிடுவோம். யாழில் தற்கொலை செய்யும் பல காவாலிகள் போதைப்பொருள் பாவானையாலேயே தற்கொலை செய்கின்றார்.
தொடர்ச்சியான போதைப்பொருள் பயன்பாடு மூளையின் முன்பகுதி மண்டலத்தை (Prefrontal Cortex) பாதிக்கிறது. இதனால் என்ன செய்கிறோம், அதன் விளைவு எவ்வளவு கொடூரமானது என்பதைச் சிந்திக்கும் திறன் முற்றிலும் செயலிழந்துவிடும்.
எரியும் தீயின் வழியைத் தேர்ந்தெடுப்பது யோசித்து எடுக்கப்படும் முடிவல்ல; தீவிரமான மன உளைச்சலின் போது திடீரென ஏற்படும் ஆவேசமான முடிவாகும் (Impulsive Decision).
அதிகப்படியான போதைப்பொருள் பயன்பாடு அல்லது போதை இறங்கும் போது (Withdrawal) தீவிரமான பயம், மன பிராந்தி மற்றும் மாயத்தோற்றங்கள் ஏற்படும்.
போதையின் உச்சத்தில் இருக்கும் போது அல்லது மூளையின் வேதிப்பொருட்கள் மாறுபடும் போது, அவர்களுக்குப் உடலின் வலி உணர்வு தற்காலிகமாக மரத்துப்போக வாய்ப்புள்ளது.





