புதினங்களின் சங்கமம்

யாழில் வீடு ஒன்றில் 28 பவுண் நகைகள் கொள்ளை! கொண்டாட்டத்திற்கு செல்வதற்கு எடுத்து வைத்த நகைகளாம்!

யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு செல்வதற்கு முதல்நாள் நகைகளை எடுத்து தயார் செய்து வைத்த வீட்டாரின் 28 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளது.
உரும்பிராய் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் , தமது உறவினர் வீட்டு கொண்டாட நிகழ்வுக்கு மறுநாள் காலை செல்வதற்காக நகைகள் மற்றும் ஆடைகளை எடுத்து தயார் செய்த பின்னர் , தூக்கத்திற்கு சென்றுள்ளனர்.

காலையில் எழுந்து பார்த்த போது , ஆடைகள் களையப்பட்டு , நகைகள் களவாடப்பட்டு இருந்தமையை வீட்டார் பார்த்து , அதிர்ச்சியடைந்த நிலையில் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்

முறைப்பாட்டின் பிரகாரம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் , தாலிக்கொடி உள்ளிட்ட 28 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக வீட்டார் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x