புதினங்களின் சங்கமம்

180 கி.மீ வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த காவாலிகளே இறந்தார்கள்!! லொறி உரிமையாளரின் அதிர்ச்சி வாக்குமூலம்!! வந்த வேகத்தின் வீடியோ இணைப்பு!

நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் போலவல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும், வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்ததாக கன்டெய்னர் லொறியின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

விபத்தின் போது குறித்த இளைஞர்கள் அதிக வேகத்தில் பயணித்ததாகவும், சுமார் மணிக்கு 160 முதல் 180 கிலோமீற்றர் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென தோன்றி டிரெய்லர் மீது மோதியதாகவும் லொறி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், லொறியைத் திருப்பும் நடவடிக்கையின் போது வீதியில் எந்த வாகனமும் இருக்கவில்லை எனவும், உதவியாளர் ஒருவர் வீதிப் போக்குவரத்தை நிறுத்தி, பாதை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பின்னரே டிரெய்லர் திருப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான CCTV காட்சிகளில் இடம்பெற்ற விடயங்கள் தெளிவாகக் காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் குறித்த வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக ஏற்கனவே பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விபத்துக்குப் பின்னர் கன்டெய்னர் லொறிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். உள்ளூர்வாசிகள் வாகனத்துக்கு ஆதரவாக இருந்ததாகவும், வெளியிடங்களில் இருந்து வந்த சிலரே வாகனத்தை சேதப்படுத்தி பின்னர் தீ வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சம்பவ இடத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருந்த போதிலும், லொறி மீதான தாக்குதலைத் தடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 29 ஆம் திகதி நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் போலவல பகுதியில் கன்டெய்னர் லொறியுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

பின்னர் குறித்த லொறி தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

May be an image of one or more people, beard, people smiling, motorcycle, scooter and text that says "THILINA MOTORS MOT DEES"

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x