புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் தப்பிய கடத்தல்காரர்கள்: கைத்துப்பாக்கியுடன் தப்பியதாக மக்கள் பரபரப்பு தகவல்! வீடியோ

தர்மபுரம் காவல் பிரிவு, K.N.57 புன்னநிரவி கிராம அலுவலர் பிரிவு மக்கள் தர்மபுரம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில், கல்லாறு கத்தோலிக்க தேவாலயம் அருகே விடப்பட்டிருந்த ஒரு உரப்பையில், 3 பொட்டலங்களாகப் பொதி செய்யப்பட்டிருந்த 6.49 கிலோகிராம் கேரள கஞ்சா இரவு 23.45 மணிக்கு கைப்பற்றப்பட்டுளது.BGK 3427 என்ற பதிவு எண் கொண்ட கருப்பு நிற பல்சர் (200cc) மோட்டார் சைக்கிளும், BIJ 2767 என்ற பதிவு எண் கொண்ட கருப்பு நிற பல்சர் (160cc) மோட்டார் சைக்கிளும் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பான அறிக்கை 23.07.2026 அன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இன்று (22.07.2026) இரவு கஞ்சா பொதியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களை கிராம மக்களும் பொலிஸாரும் இணைந்து மடக்கிப் பிடிக்க முயன்ற நிலையில், சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளையும் கஞ்சாவையும் வீதியிலேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது
இன்று இரவு கல்லாறு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கஞ்சா பொதியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை அவதானித்த அப்பகுதி கிராம மக்கள், அவர்களைப் பின்தொடர்ந்து சென்று வழிமறிக்க முயன்றுள்ளனர்.

இதன்போது, கடத்தல்காரர்கள் கிராமவாசிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக கல்லாறு பகுதியிலிருந்து ஏ-35 (A35) முல்லைத்தீவு வீதியை நோக்கி அதிக வேகத்துடன் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி தப்பியோட முயன்றுள்ளனர்.
உடனடியாகச் செயற்பட்ட கிராம மக்கள், தருமபுரம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதுடன் பொலிஸாருடன் இணைந்து அவர்களைப் பிடிக்க முயன்றனர். பொதுமக்களினதும் பொலிஸாரினதும் சுற்றிவளைப்பை உணர்ந்த கடத்தல்காரர்கள், தாம் கொண்டு வந்த கஞ்சா பொதியையும், பயணித்த மோட்டார் சைக்கிளையும் வீதியிலேயே போட்டுவிட்டு இருளில் தப்பி ஓடியுள்ளனர்.
தப்பி ஒடிவர்களிடம் கைத்துப்பாக்கி ஒன்று இருந்ததாகச் சம்பவ இடத்தில் இருந்த கிராம மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் கஞ்சா பொதியையும் கைப்பற்றியுள்ள தருமபுரம் பொலிஸார், தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x