புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் 66 வயதான ஓய்வு பெற்ற அரச அதிகாரியின் அன்புத் தொல்லை தாங்க முடியாது மனைவி கனடா தப்பி ஓட்டம்! வீட்டில் பல பெண்களுடன் கூத்து!! தானும் படுக்க மாட்டாள்,.. தள்ளியும் படுக்க மாட்டாள் என அதிகாரி சட்டத்தரணியிடம் கதறல்!!

யாழ் கந்தர்மடம் பகுதியில் வாழும் ஓய்வூதியர் ஒருவர் அண்மையில் சட்டத்தரணி ஒருவரை அணுகியுள்ளார்.வெளிநாட்டில் இருந்து வந்த மருமகன் தன்னை வீட்டை விட்டு எழுப்ப முயன்று வருவதாகவும் அதற்கு பொலிசாரும் உறுதுணையாக இருப்பதாகவும் சட்டத்தரணியிடம் கூறியிருந்தார். குறித்த வீட்டை தானும் மனைவியும் இறந்த பின்னரே தனது மகளு்ககு என சீவிய உரித்துடன் எழுதி வைத்துள்ளதாகவும் ஆனால் தற்போது மகளின் கணவர் வந்து தன்னை வீட்டை விட்டு எழும்புமாறு கூறி வருவாகவும் சட்டத்தரணியிடம் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக சட்டத்தரணி வழக்கை எடுக்க ஆயத்தமான போது குறித்த சட்டத்தரணியைத் தொடர்பு கொண்ட அதிகாரியின் மருமகனால் அவருக்கு அதிர்ச்சித் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

66 வயதான ஓய்வு பெற்ற குறித்த அதிகாரிக்கு இரு பெண்கள் மற்றம் ஆண் என 3 பிள்ளைகள். அவர் நீண்டகாலமாக வடக்கு மாகாணத்திற்கு வெளியே கடமைாற்றி வந்துள்ளார். மனைவியும் அரச அதிகாரியாக இருந்து அண்மையில் ஓய்வு பெற்றவர். அவர் பாபா பக்தை. வீட்டிலேயே பாபாவை பெரிய உருவமாக செய்து வழிபட்டு வந்தவர். ஓய்வு பெற்று வந்த குறித்த அதிகாரி மனைவியை தனது பாலியல் தேவைக்காக தொல்லைப்படுத்த தொடங்கியு்ளளார். அத்துடன் அசைவ உணவுகள் மற்றும் குடிவகைகளையும் வீட்டில் கொண்டு வந்து பாவித்து வந்துள்ளார். இது தொடர்பாக மனைவி பல தடவைகள் கணவனுக்கு எச்சரித்தும் பலனில்லாது போயுள்ளது. குறிப்பாக வியாழன், வெள்ளி, செவ்வாற் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மனைவி புனிதமாக இருக்கும் நாட்களிலும் மனைவியை கட்டாய பாலியல் உறவுக்கு உள்ளாக்கி வந்துள்ளதுடன் அசைவ சாப்பாடுகள் தயாரித்த தருமாறும் தொல்லைப்படுத்தி வந்துள்ளார்.

கணவனின் தொல்லைகளை சில வருடங்கள் பொறுத்துக் கொண்ட மனைவி தான் ஓய்வு பெற்று ஒரு சில மாதங்களிலேயே கனடாவில் வாழும் மகளிடம் ஓடித் தப்பியுள்ளார். ஒரு மாதம் சென்று திரும்புவதாக கூறிச் சென்ற மனைவி அங்கேயே தங்கி விட்டதால் அவரை திரும்ப வருமாறு கணவன் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் மனைவி வரவில்லை. இவ்வாறான நிலையில் வீட்டில் கடும் வேலை பார்க்கத் தொடங்கியுள்ளார் கணவர். தென்னிலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வீட்டை நாள் வாடகை்ககு கொடுக்கும் போர்வையில் வெளி மாகாணத்தில் முன்னர் அதிகாரியாகக் கடமையாற்றிய போது ஏற்பட்ட தொடர்புகள் மூலம் பெண்களைக் கொண்டு வந்து அவர்களுடன் குடிச்சு கும்மாளமிட்டதுடன் அயலவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் அயலவர்கள் கனடாவில் இருந்த வீட்டு சொந்தக்காரியான மகளுக்கு முறையிட்டதால் அங்கிருந்த அதிகாரியின் மனைவியும் மகளுமாகச் சேர்ந்து அதிகாரியை வீட்டிலிருந்து அகற்ற முயற்சி செய்துள்ளார். அதன் ஒருபகுதியாக கனடாவிலிருந்து வந்த மகளின் கணவன் குறித்த வீட்டில் தங்கியிருநது நிலமையை அவதானித்து வந்ததுடன் அதிகாரியின் அனுமதி இல்லாது அங்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஒரு குடும்பத்திற்கு வாடகைக்கும் வீட்டை கொடுக்க ஆயத்தமாகியிருந்தார். இந் நிலையில் மாமனுககும் மருமகனுக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டு அது பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.

இதன் பின்னரே அதிகாரி சட்டத்தரணியை நாடி தனது மருமகனை வீட்டை விட்டு துரத்த முயன்றுள்ளார். அதிகாரியின் நடவடிக்கைகளை மருமகன் ஊடாக அறிந்த சட்டத்தணி வழக்கை எடுக்கவில்லை எனத் தெரியவருகின்றது. இந் நிலையில் சட்டத்தரணியின் அலுவலகத்திற்கு மது போதையில் சென்ற அதிகாரி ”சட்டத்தரணியையும் தரக்குறைவாகப் ஏசியதாகவும்.. தானும் படுக்க மாட்டாள்,.. தள்ளியும் படுக்க மாட்டாள் என மனைவியையும் அங்கு வைத்து ஏசியதாகவும் தெரியவருகின்றது. இதன் பின் சட்டத்தரணியின் கடும் எச்சரிக்கை காரணமாக குறித்த ஓய்வூதியர் அந் இடத்தை விட்டுச் சென்றதாகத் தெரியவருகின்றது.

குறித்த அதிகாரி யாழில் செயற்படும் பிரபலமான சட்டத்தரணி ஒருவரின் நண்பன் எனவும் அவரது வேண்டுகோளின் பெயரிலேயே இந்த சட்டத்தணி அதிகாரியின் வழக்கை எடுக்க ஆயத்தப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது. இ்வ்வாறான நிலையில் தனது நண்பனான மூத்த சட்டத்தரணியையும் குறித்த அதிகாரி துாசண வார்த்தைகளால் ஏசியபடி அங்கிருந்து சென்றுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x