யாழில் காவாலிகளுடன் குடித்து கும்மாளமடித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரை வீதி, பாசையூரைச் சேர்ந்த 25 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு 9.00 மணிக்கு மாடியில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு பின்னர், அவரது நண்பர்கள் சென்ற நிலையில் அவர் அந்த மாடியிலேயே உறங்கியுள்ளார்.
பின்னர், அந்த மாடிக் கட்டிட வேலைகளைச் செய்வதற்காக வந்த வேலைக்காரர்கள் குறித்த குடும்பஸ்தர் அசைவற்றுக்காணப்படுவதை அவதானித்தனர்.
அதன்பின்னர், பொலிஸார் மற்றும் உறவினர்களுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

