புதினங்களின் சங்கமம்

யாழில் துாக்க மாத்திரை கொடுத்து சிறுமி துஸ்பிரயோம்!! புகைப்படங்கள்

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….

யாழ் நகர பேருந்து நிலையத்தில் யாசகம் கேட்க பயன்படுத்தப்படும் இந்த பெண் #சிறுமி எப்பொழுதும் உறங்கியபடியே இருப்பதற்கான காரணம் என்ன ??? …!!!

மயக்க மருந்து அல்லது வேறு ஏதும் சிறுமிக்கு கொடுத்து சிறுமி உறங்கவைக்கப்படுகிறதா ???
இந்தியக்கலாச்சாரம் யாழிலும் பரவியதா? #Beggars_Mafia

இது ஒரு பெரிய வலையமைப்பாக நடைபெறுகிறது போல் தோன்றுகின்றது .
நமது யாழில் #Smart_Phone உடன் யாசகர்கள் .😱

யாழ் பேருந்து நிலையத்தில் இன்று(25/06/2026) மாலை நான் பயணமொன்றை மேற்கொள்ள அரச பேருந்து ஒன்றில் அமர்ந்திருக்கும் பொழுது குறித்த பெண் கையில் சிறுமி ஒன்றை ஏந்திய வண்ணம் ஏதோ பதிக்கப்பட்ட சிறு துண்டு ஒன்றினை பயணிகள் அனைவருக்கும் கையளித்த வண்ணம் இருந்தார் . அதை கையால் வாங்காமல் தவிர்த்தவர்களின் மடியினில் வில்லங்கத்திற்கு வைத்தா வைத்தார் அதன் போது எனது பேருந்திலிருந்த சக பயணி இளைஞன் ஒருவன் திடீரென அந்த யாசக பெண்ணிடம் கையிலிருக்கும் சிறுமி ஏன் உறங்கியபடியே உள்ளது என கேட்டார் ஆம் அப்போது தான் நானும் அந்தச்சிறுமியை பார்த்தேன் உண்மையிலேயே அந்தச்சிறுமி அரை மயக்கத்தில் உள்ளது போலவே எனக்கும் தோன்றியது மேலும் அவ்விளைஞன் அந்தச்சிறுமியை எழுப்புமாறும்; குழந்தை உறங்குவதற்காக ஏதேனும் மருந்து கொடுக்கப்பட்டதா என்றும் கேட்டான் அவ்வளவு தான் அந்தப்பெண் #சந்திரமுகியின் சகோதரியாகவே மாறிவிட்டாள் அந்தப்பெண்ணின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை வைத்து ஒரு இலக்கணமே எழுதலாம் . அந்தப் பேருந்தில் அமர்ந்திருந்த முக்கால்வாசி பயணிகளான உயர்தர வகுப்புகள் முடித்து வந்த மாணவ மாணவிகளிற்கு தனியான ஒரு இலக்கண வகுப்பே அந்தப்பேருந்தில் நடைபெற்றது .அவர்களின் வாழ்க்கையில் முதல் தடவை கேட்கும் புதுப்புது இலக்கண இலக்கிய வாத்தியங்கள் இதுவாக தானிருக்கும் ஏனென்றால் எனக்கே அதெல்லாம் புது வசனங்களாகத்தானிருந்தது. அத்தோடு அந்த இளைஞனுக்கு விடுத்த மிரட்டல்கள் என்றால் சொல்லவே தேவையில்லை அப்பப்போ.. அந்த இளைஞனிற்கு
#மரண அச்சுறுத்தல் மற்றும் அவ்விளைஞனை சிறைக்கு அனுப்பும் திறமை தன்னிடமிருப்பதாகவும் மிரட்டல் விடுத்தார் . என் வாழ்நாளில் இவ்வாறு பொதுவெளியில் ஒரு ஆண் இன்னொருவருக்கு சவால் விடுவதை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கின்றேன் ஆனால் இன்று ஒரு பெண் ஒரு வாலிபனை இப்படிப்பட்ட ஒரு பொதுவெளியில் மிரட்டியதை இன்றே காண்கின்றேன் .😱

பின்னர் நிலமையை சரிசெய்ய நடத்துனர் தலையிட்டு அப்பெண்ணை பேருந்திலிருந்து வெளியேற்றினார் .
வெளியேறிய பின்னர் யாருடனோ தொலைபேசியில் அழைப்பை எடுத்து அச்சம்பவத்தை விளக்கியது போல் தோன்றியது .

சிறிது நேரத்தில் பேருந்தின் வெளியே இருந்து அவ்விளைஞனை ஒளிப்படம் (photo) எடுத்தார் அந்த நேரத்தில் அவ்விளைஞனும் அப்பெண்ணை ஒளிப்படம் எடுத்துக்கொண்டார் . ஆனால் நடத்துனர் அப்பெண்ணை வெளியேற்றியதிலிருந்து அவ்விளைஞன் ஒரு வசனம் பேசவில்லை .

மறுபடியும் பேருந்தின் வெளியே இருந்தவாறே அவ்விளைஞனுக்கு மிரட்டல் விட ஆரம்பித்தார் அப்போது பேசத்தொடங்கியது தமிலிணக்கணமல்ல !!! சிங்கள இலக்கணம் !!!

அதன் பின்னர் அவ்விளைஞன் அச்சிறுமியின் மயக்க நிலையில் இருந்த சந்தேகத்தினை காவல்துறையிடம் அலைபேசி வாயிலாக முறையிட்டதாகவும் அவ்விளைஞன் கூறினார் .
ஆனால் அடித்துச் சொல்லுகின்றேன் .

#இனி_அவ்விளைஞன்_இது_போல_அநியாயங்களை_தட்டிக்கேட்க_சந்தர்ப்பம்_இல்லை ஏன் தெரியுமா அந்த பேருந்தில் இருந்த மீதி பயணிகள் யாருக்கும் அவ்விளைஞன் அச்சிறுமியின் மயக்கத்தின் மீதுள்ள சந்தேகத்தினை தட்டிக்கேட்கும் போது அது நியாயமான சந்தேகம் என்று அவ்விளைஞனுக்கு ஆதரவு கொடுக்க துணிவிருக்கவில்லை ; என்னையும் சேர்த்துத்தான்
சில கேள்விகள்….!
*#* பேருந்தில் ஏறி பயணிகளை அசௌகரியமாக்கும் யாசக முறைமை சட்டரீதியானதா ?
*#* இலங்கை போக்குவரத்துச் சபை இதனை கண்டுகொள்வதில்லையா ??
*#* அந்தச்சிறுமியின் உறக்க நிலைக்கான காரணமென்ன ? உடல்நலக்குறைவா? அல்லது இந்தியா போல நவீன ரக மருந்து ஏதும் சிறுமிக்கு வழங்கப்பட்டதா?
*#* இச்சம்பவம் நடைபெறும்போது அந்த யாசகி மது அல்லது வேறேதும் பாவித்திருந்தாரா?
*#* மாதர் சங்கங்கள் , சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமான துறையில் இருப்பவர்கள் இதனை கண்டுகொள்வதில்லையா ?
*#* வெளி மாவட்டத்திலிருந்து அழைத்து வரப்பட்டு இது ஒரு வலையமைப்பாக நடைபெறுகிறுகின்றதா ?
*#* அவ்விளைஞனை மிரட்டிய விடயங்கள் எல்லாம் உண்மையில் அப்பெண்ணால் செய்யமுடியுமா?
*#*அவ்வாறு செய்ய முடியுமாயின் அதனை செய்வதற்கு அவளின் பின்புலத்தில் யார் யார் உள்ளனர் ?
*#* யாசகம் என்ற போர்வையில் வேறேதும் நடைபெறுகிறதா ?
*#* உண்மையிலேயே வறுமையில் யாசகம் கேட்கின்றார்கள் எனின் நவீன ரக தொலைபேசி எவ்வாறு வந்தது?
இவர்களின் வங்கிக்கணக்குகள் ஆராயப்படுமா??
*#* குழந்தையை அல்லது சிறுவர்களை வர்த்தகம் மற்றும் யாசகத்திற்கு பயன்படுத்த இலங்கை சட்டத்தில் இடமிருக்கின்றதா ???
நமது காவல்துறை மற்றும் இது சம்பந்தமான விசயங்களிற்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய துறையினர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்
இன்னும் நிறைய கேள்விகள் உங்களிற்கு தோன்றலாம். அவ்வாறு தோன்றினால் உங்கள் கேள்விகள் என்ன என்பதை நீங்கள் செயலில் காட்டுங்கள்
உலகின் தலை சிறந்த சொல் #செயல்

May be an image of one or more people, phone and textMay be an image of one or more people and street

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x