யாழில் பாரிய குற்றச்செயல்கள் செய்த படையப்பா தேடப்படுகின்றான்!! எதற்காக?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
புங்குடுதீவு கிராமத்தில் மூன்று பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள படையப்பா என்று அழைக்கப்படுகின்ற லிக்சாந் என்கிற இந்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
ஆவா குழுவுடன் தொடர்புடைய இந்த நபர் நேற்று இரவு புங்குடுதீவு கேரதீவு பிரதேசத்தில் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் காயப்பட்ட அந்த நபர் திரும்பவும் இந்த படையப்பா என்பவர் மீது அதே கத்தியால் தாக்கியதில் படையப்பா காயமடைந்த போதிலும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சொல்லாமல் தலைமறைவாகியுள்ளதாகவும் ஊர்காவற்துறை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.
நான்கு தினங்களுக்கு முன்பு புங்குடுதீவு வல்லன் நாகதம்பிரான் ஆலயத்தில் முரளி என்கிற குடும்பஸ்தரை வாளால் வெட்டி படுகாயம் ஆக்கியமை தொடர்பில் இந்த படையப்பா என்பவரும் இன்னுமொரு சந்தேக நபரும் பொலிசாரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே நேற்றைய தினம் குறித்த கத்திக்குத்து நடைபெற்றுள்ளது.
படையப்பா என்பவர் சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் பண்ணை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவரை கலைத்து சென்று வாளால் வெட்டிய சம்பவம் தொடர்பில் பொலிசாரால் தேடப்படுகின்றார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆவா குழுவின் முக்கியஸ்தர் ஒருவரை கிரனேட் கைகுண்டுடன் பொலிசார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தினை சேர்ந்த இந்த படையப்பா என்கிற நபர் தொடர்பான விபரங்களை தெரியப்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளனர்.





