புதினங்களின் சங்கமம்

யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்கவின் மகன் ஷாகீர் சிறையில் அடைப்பு!

குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரி தனுஷ்கவின் மகன் ஷாகீர் இன்றையதினம் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகினார். இதன்போது குறித்த சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

வழக்கு ஒன்றினை இல்லாது செய்வதாக கூறி, யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரின் மகன் ஒருவர் 20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுள்ளார். இந்நிலையில் இலஞ்சம் வழங்கியவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்தவகையில் குறித்த பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் இலஞ்சம் பெற்ற நபரை கைது செய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந் நிலையில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.