புதினங்களின் சங்கமம்

யாழில் NPP அரசியல்வாதி இறந்த தனது தந்தைக்கு சுடலைக்குள் வைத்து செய்த கேவலம்!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் தந்தையின் பூதவுடல் தகனம் செய்ய கட்டணம் செலுத்தப்படாத நிலையில் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல் கோரப்பட்ட நிலையில் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வடலியடைப்பு பிரதேச சபை உறுப்பினரான கந்தசாமி ரவிச்சந்திரனின் தந்தையார் கடந்த ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி காலமானர்.

அவரது பூதவுடல் மறுநாள் 5ஆம் திகதி விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் , மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட குறித்த விளாவெளி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்ய பிரதேச சபையில் விண்ணப்ப படிவம் பெற்று , அதற்கான கட்டணமாக 2ஆயிரம் ரூபாய் செலுத்தி பற்று சீட்டை இந்து மயானத்திற்கு பொறுப்பான உத்தியோகஸ்தரிடம் கையளித்தே தகனம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறான நிலையில் , பிரதேச சபையிடம் அனுமதி பெறாமல் , அதற்கான கட்டணத்தையும் செலுத்தாது , பிரதேச சபை உறுப்பினர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து , தந்தையின் உடலை தகனம் செய்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் அறிந்த பிரதேச வாசி ஒருவர் , குறித்த இந்து மயானத்தில் உடல் தகனம் செய்தவர்களின் விபரம் தொடர்பிலும் , அதற்காக செலுத்தப்பட்ட கட்டணம் தொடர்பிலும் தகவல் அறியும் சட்டம் ஊடாக மே மாதம் 15ஆம் திகதி தகவல் கோரியுள்ளார்.

அந்நிலையில் கட்டணம் செலுத்தாது தந்தையின் உடலை தகனம் செய்த உறுப்பினரிடம் பிரதேச சபையினர் கட்டணம் செலுத்த கோரி , உடல் தகனம் செய்து சுமார் 50 நாட்களின் பின்னர் மே மாதம் 25ஆம் திகதி கட்டணத்தை அறவிட்டு அதற்கான பற்று சீட்டை வழங்கியுள்ளனர்

பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யும் போது, மரண சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு , தகனம் செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்று , பூரணப்படுத்தி சமர்பிப்பதுடன் , அதற்கான கட்டணத்தை செலுத்தி, பற்று சீட்டை பெற்ற பின்னரே உடலை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது நியதியாக இருக்கும் போது குறித்த பிரதேச சபை உறுப்பினர் இவை எவற்றையும் பின்பற்றாது தந்தையின் உடலை தகனம் செய்துள்ளார்.

குறித்த உறுப்பினர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளமை இதனூடாக வெளிப்பட்டுள்ளதால் , உறுப்பினருக்கு எதிராகவும் , பற்று சீட்டு எதுவும் வழங்காது உடலை தகனம் செய்ய அனுமதித்த உத்தியோகஸ்தர்கள் , 50நாட்கள் கடந்தும் கட்டணம் செலுத்த தவறியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத பிரதேச செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக தகவலை பெற்றுக்கொண்ட பிரதேச வாசி கோரியுள்ளார்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x