புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் கடற்கரையில் புலம்பெயர் தமிழ் பெண் மருத்துவர் துர்ஷிகா சடலமாக மீட்கப்பட்டார்!!

கடந்த செப்டெம்பர் 11இ பிரிட்டன் மா-கேட் கடல் கரைக்கு சில பெண்கள் குளிக்கச் சென்றுள்ளார்கள். இரவு வேளையில் அவர்கள் கடலில் இறங்கி குளித்துள்ளார்கள். இவர்களில் ஒருவர் தான் திருஷிக்கா வயது 26. இவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இன் நிலையில் அதிகாலை 3 மணி வரை நண்பிகளோடு கடலில் குளித்துள்ளார் திருஷிகா. தோழிகள் திருஷிகாவைக் கவனிக்காது ஹோட்டலுக்கு சென்று விட்டார்கள். ஆனால் அங்கே சென்றதும் தான் அவரைக் காணவில்லை என்று தேட ஆரம்பித்துள்ளார்கள்.

இந் நிலையில் கடல் கரைக்கு அருகாமையில் உள்ளஇ துறைமுகப் பகுதியில் அதிகாலை 5.45 மணிக்கு சடலமாக காணப்பட்டுள்ளார் துர்ஷிகா. இவர் ஒரு ஈழத் தமிழர் என்று அறியப்படுகிறது. அவரது அப்பாவும் ஒரு மருத்துவர் என்றும்… அம்மா சமீபத்தில் தான் புற்று நோயால் இறந்தார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.