வட மாகாண அமைச்சின் செயலாளர் ஒருவர் நிறை வெறியில் பொலிசாரால் கைது!
வடக்கு மாகாணசபையின் அமைச்சு ஒன்றின் செயலாளர் ஒருவர் அண்மையில் நிறை வெறியில் வல்வெட்டித் துறைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறைக் கூண்டினுள் அடைக்கப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த செயலாளர் நிறை வெறியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வல்வெட்டித்துறைப் பொலிசார் அவரை மறித்துள்ளார்கள். அவர் யார் என அறியாத பொலிசார் அவர் நிறை வெறியில் நிற்பதை அவதானித்து அவரிடம் மது சோதனை நடாத்தி அவர் வெறியில் இருப்பதை உறுதி சென்று அவரை அப்படியே கூட்டிச் சென்று பொலிஸ் நிலையக் கூண்டினுள் அடைத்துள்ளார்கள்.
இந் நிலையில் வெறி முறிந்து திக்குமுக்காடிய குறித்த செயலாளர் வடக்கு மாகாண ஆளுனநர் தொடங்கி முக்கிய புள்ளிகள் அனைவருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழுதுள்ளார்.
இருப்பினும் பொலிஸ் முறைப்பாட்டுப் புத்தகத்தில் குறித்த சம்பவம் பதிவு செய்யப்பட்டதால் குறித்த சம்பவத்தை சமாளிக்க முடியாது என பொலிஸ் தரப்பு கூறியதை அடுத்து அவரை நீதிமன்றில் குறிப்பிட்ட திகதியில் ஆயராகுமாறு கூறி பொலிசார் பொலிஸ் சிறைக் கூட்டிலிருந்து வெளியே விட்டு பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன்.

