புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் கொடூரம்!! அரச ஊழியரான இளம் பெண் கணவனால் கொலை!! மனைவி தங்கையும் படுகாயம்!! (Photos)

மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த குடும்பத்தலைவர், சகோதரியைக் காப்பாற்ற முற்பட்ட இளம் பெண்ணையும் கத்தியால் குத்தியுள்ளார். அத்துடன் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இளம் குடும்பபப் பெண் உயிரிழந்த நிலையில் அவரது சகோதரியும் கொலையாளியும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபலனந்தனாறு மயில்வாகனபுரம் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றது.

பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் பணியாற்றும் சுகந்தன் சகுந்தலா (வயது -25) என்ற குடும்பப்பெண்ணே கொல்லப்பட்டார்.

அவரது கணவரான கொலையாளி சுகந்தன் (வயது-24), கொல்லப்பட்டவரின் இளைய சகோதரி கிருஷ்ணசாமி பிரியங்கா (வயது-22) ஆகிய இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

“சகுந்தலாவுக்கும் சுகந்தனுக்கும் 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்றது. எனினும் அண்மைக்காலமாக இருவருக்கும் முரண்பாடு இருந்துள்ளது.

இன்று அதிகாலை மனைவியை கத்தியால் குத்தி சுகந்தன் கொலை செய்துள்ளார். அதனைக் கண்ட சகுந்தலாவின் சகோதரி தடுக்க முற்பட்டுள்ளார். அதனால் மனைவியின் சகோதரியின் தலையில் கொலையாளி கத்தியால் குத்தியுள்ளார்.

அத்துடன், தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு கொலையாளி முயன்றுள்ளார்.

கொலையாளி தற்போது பொலிஸ் காவலில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

Image may contain: 2 peopleImage may contain: one or more peopleImage may contain: one or more people and people standingImage may contain: 1 person, standing and outdoor