கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது!
கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன், இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினால் (BCIC) இன்று காலை (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இதற்கு முன்னர் குச்சவெளி பிரதேச செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில், இரணைகேணி பகுதியில் நிலம் சம்பந்தமாக வழங்கப்பட்ட இலஞ்சம் குறித்த புகார் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்குச் சென்றிருந்தார். இதன்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நாளை (27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் மாகாண அரச அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

