புதினங்களின் சங்கமம்

யாழில் மனைவி மீது சந்தேகம்!! அந்தரங்கத்திற்கும் பூட்டு போட்டானா காவாலிக் கணவன்?

யாழில் காதலித்து திருமணம் முடித்த கஞ்சாக் காவாலி அவனது மனைவியை மிகவும் கொடுமைப்படுத்துவதாக மனைவியின் பெற்றோர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர். யாழ் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குறித்த காவாலி கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டு தற்போது வெளியேறியுள்ளான். சிறைக்குச் செல்ல முன்னரும் சிறையிலிருந்து வெளியேறிய பின்னரும் மனைவியை வேறு நபர்களுடன் தொடர்பு என்ற சந்தேகத்தில் தாக்கி வந்ததாகத் தெரியவருகின்றது. தான் வீட்டை விட்டு வெளியேறும் போது மனைவியை வீட்டினுள் வீடு மற்றும் கேற் திறப்பை கொண்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அத்துடன் வீடு முழுவதும் சிசிரிவி கமராக்கள் பொருத்தி கண்காணிப்பையும் மேற்கொண்டிருந்தான். கனடாவில் வசித்து வந்த மனைவியின் உறவு்ககாரரான குடும்பஸ்தர் இவனது சந்தேகப் புத்தி தெரியாது அண்மையில் யாழ்ப்பாணம் வந்த போது இவனது வீட்டுக்குச் சென்று நீண்ட நேரமாக கேற் பகுதியில் நின்று அவர்களை அழைத்த போதும் பதில் வராததால் அங்கிருந்து திரும்பியுள்ளார். இதனை தனது மொபைல் போனில் அவதானித்தவாறு வெளி இடம் ஒன்றில் நின்றிருந்த கணவன் வீட்டுக்கு வந்து மனைவியை தாக்கியதால் கடும் காயமுற்ற மனைவியை நிலத்தில் வீழ்ந்ததாக கூறி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளான்.

இவனைக் காதலித்து ஓடியதால் மனைவியின் பெற்றோர் மனைவியுடனான தொடர்பை துண்டித்துள்ளார்கள். மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து அங்கு சென்ற போதே கணவனின் சித்திரவதைகள் தொடர்பாக அறிந்து தற்போது பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x