யாழில் தாய் மாமன் உயிரிழந்த சோகத்தில் மருமகனும் மரணம்!!
யாழ்ப்பாணத்தில் தாய்மாமன் உயிரிழந்த துயரம் தாங்கமுடியாமல் மருமகன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞனின் தாய்மாமன் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் இளைஞன் மனவிரக்தியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், இளைஞன் இன்றையதினம் (13) தனது வீட்டுக்கு பின்னால் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இதனையடுத்து இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.