யாழில் கணவன் தொடர்ந்து சித்திரவதை! பொலிசாரிடம் முறையிட்டும் பலனில்லை! மனைவி தீ மூட்டினார்!
யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் கணவரின் கொடுர தாக்குதலை தாங்கிக் கொள்ளா முடியாத மனைவி மண்ணெண்ணை ஊற்றி தீமுட்டியுள்ளார்.
3 பிள்ளைகளின் தாயானா ஒருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். நீர்வேலிப் பகுதியில் வசித்துவந்த குறித்த குடும்பப் பெண், அவருடைய கணவரால் தொடர்ந்து சித்திரவதைகளை அனுபவித்து வந்துள்ளார்.
தனக்கும், தன் குழந்தைகளுக்கும் நடக்கும் கொடுமைகளை கூறி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் 3 தடவை கணவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
கோப்பாய் பொலிஸார் அவ்விடயம் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், சித்திரவதைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் தலமைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த்துள்ளார்.
இரண்டு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்து பொலிஸ் தரப்பினரால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று முந்தினம் கணவரின் தாக்குதலை தாங்காது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
இச் சம்பவத்தின் போது வீட்டில் இருந்த கணவர், தீயை அணைக்காமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இருப்பினும் வீட்டிலிருந்த குறித்த குடும்பப் பெண்ணின் தாய் தீயை அணைத்து, அவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
வைத்தியசாலையில் அதீதிவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் அப் பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும் இந்த விபரீத முடிவுக்கு காரணமான கணவரை கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை.

