யாழில், வெளிநாட்டு மோகம் கொண்டவர்களை ஏமாற்றி பல பெண்களுடன் சொர்க்க வாழ்க்கை வாழ்ந்து வரும் கலியாண புறோக்கர் வினோஜன்!! வீடியோ
யாழ் வல்வெட்டித்துறை கம்பர்மலையைச் சேர்ந்த வினோஜன் எனும் போலி வெளிநாட்டு முகவரால் ஏராளமானவர்கள் பெருந்தொகை பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
தனது முதல் மனைவிக்கு நகைகள் மற்றும் சகோதரிகளுக்கு வாகனங்கள் எடுத்து கொடுத்துள்ளதுடன் தானும் வெளிநாட்டுக்குச் சென்று மீளவும் இலங்கை திரும்பி வந்து தலைமறைவாக உள்ளதாகத் தெரியவருகின்றது. தலைமறைவாக உள்ள வினோஜன் தற்போதும் நியூஸ்லாந்திற்கு ஆக்களை ஏற்றப்போவதாக கூறி பணம் பெற்று வருவதாக இவனால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
வினோஜனுக்கு வல்வெட்டித்துறை பொலிசாரால் மாத்திரம் 4 பிடிவிறாந்துகள் போடப்பட்டு் உள்ளதாகவும் தற்போது இவன் மட்டக்களப்பில் உள்ள 3 வது மனைவியுடன் தலைமறைவாக உள்ளதாக இவனால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றார்கள். இவன் திருமணப் புறோக்கர் வேலை செய்வதாக போலி புறோக்கர் சான்றிதழை வைத்துக் கொண்டு அதன் மூலம் நட்பாகிய பெண்களை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது. திருகோணமலை மற்றும் பருத்தி்துறை ஆகிய இடங்களி்ல் இவன் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும் தாங்கள் அறிந்த வகையில் நான்கு திருமணங்கள் செய்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவனால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றார்கள். இவனை கண்டவர்கள் உடனடியாக வல்வெட்டித்துறைப் பொலிசாரிடம் முறையிடுமாறும் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தமாறும் பொலிஸ்தரப்பினர் கேட்டுள்ளார்கள்.
முதல் மனைவியின் வாக்குமூலம் இது
போலி திருமண புறோக்கர் பத்திரம்

















